சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)

சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம்.
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். சாமை அரிசியை தண்ணீரில் அலசி விட்டு ஒரு 30 நிமிடங்கள் ஊறவைத்து ஒரு குக்கரில் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும். ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு சீரகம் கடலைப்பருப்பு சோம்பு சேர்த்து நன்கு பொரிய விடவும். பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு பெரிய வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.தண்ணீர் சேர்க்காமல் ஊற்றிய எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். குக்கரில் விசில் ஆறியதும் சாதத்தை ஆறவிடவும்.
- 3
பின்னர் சாதத்துடன் தக்காளி கலவையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். சிறிது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இப்போது சூடான சுவையான ஆரோக்கியமான சாமை அரிசி தக்காளி சாதம் தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிறு தானிய அடை தோசை (Siru thaaniya adai dosai recipe in tamil)
#GA4சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.. எடை குறைய இதை காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)
குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
தட்டை பயறு சாதம் (Thattai payaru satham recipe in tamil)
#ONEPOTகோவை ஸ்பெஷல் அரிசிம்பருப்பு சாதம் போல் தட்டைப் பயறு வைத்து செய்தால் சுவையாக இருக்கும்.சுலபமாக செய்யக் கூடியது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
இட்லி அரிசி ஒரு டம்ளர். சாமை அரிசி ஒரு டம்ளர். உளுந்து முக்கால் டம்ளர். அரிசி சாமை கலந்து ஊறவைத்து அரைக்கவும். உளுந்து தனியாக அரைக்கவும். உப்பு போட்டு இரண்டு மாவையும் பிசைந்து வைத்து மறுநாள் இட்லி ஊற்றவும்.தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி ஒSubbulakshmi -
-
-
தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)
சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
-
சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
சாமை அரிசியின் பயன்கள்வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட முடியும்.#Chefdeena Manjula Sivakumar -
-
-
வரகு அரிசி கஞ்சி(varagu arisi kanji recipe in tamil)
#weightlossநார் சத்துக்கள் அதிகம் உள்ள வரகு அரிசியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை குறைய அதிக வாய்ப்புகள் உண்டு. R Sheriff -
தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை. Hemakathir@Iniyaa's Kitchen -
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம். Siva Sankari -
சாமை சாம்பார் சாதம்
#3M#Ilovecookingசிறுதானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.இவற்றில் பொங்கல், உப்புமா, கஞ்சி, சாதம், சாம்பார் சாதம் போன்ற பலவகை உணவுகள் செய்யலாம். இன்று சாமை சிறு தானியம் வைத்து சாம்பார் சாதம் செய்தேன். நம்மிடம் உள்ள காய்கள் வைத்து செய்யலாம்.இதற் கான காய்கள் கூட வெங்காயம் தக்காளி சேர்க்க வேண்டும். Meena Ramesh -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
-
-
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)
#made3சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். இன்று காலம் மாறிவிட்டது சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யலாம்.திணை அரிசி கொண்டு இன்று நான் தக்காளி சாதம் செய்தேன் பிரியாணி அரிசி,அரிசி சாதத்தில் இவற்றில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருந்தது ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இந்த கால குழந்தைகள் இது போன்ற சிறு தானிய வகைகள் அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
#pooja சாமை சிறு தானியத்தில் ஒன்று ஆகையால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் கேசரி செய்து கடவுளுக்கும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம் Siva Sankari -
சாமை அரிசி பொங்கல்
#Milletசாமை சிறு தானியங்களில் ஒரு வகை.இதை சாதமாக ,உப்புமாவாக அல்லது பொங்கலாக செய்து சாப்பிடலாம்.எல்லா ஆரோக்ய சத்துகளும் நிறைந்த சிறு தானியமாகும்.எளிதில் ஜீரண ஆகக்கூடிய உணவு.மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அரிசி உணவை தவிர்க்க இதை போன்ற சில தானியங்களை எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. நலத்திற்கு மட்டும் அல்ல உடல் பருமனையும் குறைக்கும்.அன்றாட வேலைகளை நாம் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செய்ய முடியும். Meena Ramesh -
-
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar
More Recipes
கமெண்ட்