செட்டிநாடு மிளகு கோழி குழம்பு (Chettinadu milagu kozhi kulambu recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 300 கிராம் கோழி
  2. 10சின்ன வெங்காயம்
  3. 1/2 பெரியவெங்காயம்
  4. 2தக்காளி
  5. 5பல் பூண்டு
  6. இரண்டு கொத்து கறிவேப்பிலை
  7. தேவையான அளவுஉப்பு
  8. தேவையான அளவுஎண்ணெய்
  9. அரைக்க
  10. 1 ஸ்பூன் மிளகு
  11. 1/2 ஸ்பூன் சோம்பு
  12. 1/2 ஸ்பூன் சீரகம்
  13. 5முந்திரி பருப்பு
  14. 1 பட்டை
  15. 11/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  16. 3/4 ஸ்பூன் தனியா தூள்
  17. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  18. 1சின்னத்துண்டு இஞ்சி
  19. 4 பல் பூண்டு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்தவற்றை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து தாளித்து வதங்கியதும் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    ஒரு மூன்று நிமிடம் கழித்து தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி மசிந்ததும் கலவைகளை ஓரத்தில் ஒதுக்கி வைத்து நடுவில் சற்று பள்ளம் பரிக்கவும். அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வைத்து வதக்கவும்.

  4. 4

    நன்றாக பச்சை வாசனை போனதும் கோழியை சேர்க்கவும்.

  5. 5

    2 நிமிடம் வதக்கவும். இரண்டு டம்ளர் கொதி நீரை சேர்க்கவும். மூடி போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைத்து எண்ணெய் பிரிந்ததும் எடுக்கவும்.

  6. 6

    கடைசியாக கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான கோழி குழம்பு தயார் இட்லியுடனும் சாதத்துடனும் பரிமாறலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes