சீசி வெஜ் பீட்சா

எல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கிக் கொள்ளவும். இதை 15 நிமிடங்கள் ஈஸ்ட் ஆக்டிவ் செய்ய வைக்கவும்.
- 2
ஒரு பெரிய பாத்திரத்தில் 3 கப் மைதா மாவு, பால் பவுடர் சேர்க்கவும்.
- 3
இதனோடு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 4
அதன்பின் ஆக்டிவ் செய்யப்பட்ட ஈஸ்ட் மற்றும் வெதுவெதுப்பான ஒரு கப் தண்ணீர் சேர்த்து மாவை 10 நிமிடங்கள் நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 5
பிசைந்த மாவை உருட்டி ஒரு கிண்ணத்தில் வைத்து 45 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 6
இப்பொழுது பீசா சாஸ் செய்ய தக்காளியை தண்ணீரில் வேக விடவும். தோல் தனியே வரும் சமயத்தில் அடுப்பை அணைத்து ஆற விட்டு அரைத்துக்கொள்ளவும்.
- 7
ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். இதில் அரைத்த தக்காளி விழுது உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
- 8
இதனோடு ஆரிகானோ, சில்லி ப்ளேக்ஸ் மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- 9
கொதிக்கும் கலவை சுண்டி வந்த பின் அடுப்பை அனைத்து விடவும். பீசா சாஸ் தயார்.
- 10
45 நிமிடங்கள் கழித்து பிசைந்து வைத்த மாவு இரட்டிப்பாக பொங்கி வரும். இதனை கைகளால் அழுத்திப் பிசையவும். இந்த மாவை 2 உருண்டைகளாக பிடிக்கவும்.
- 11
மீண்டும் அதனை மூடி வைத்து பத்து நிமிடங்கள் கழித்து,ஒரு அரை இன்ச் மொந்தத்தில் தேய்த்து எடுக்கவும்.
- 12
ஒரு பீட்சா தட்டில் வெண்ணை தடவி கொள்ளவும். அதன்மீது தேய்த்த பீட்சாவை வைத்து ஓரங்களை அழுத்தி விடவும். நடுவில் போர்க் ஸ்பூன் கொண்டு குத்தி விடவும்.
- 13
இரண்டு மேஜைக்கரண்டி பிசா சாஸை நடுவில் தடவவும். ஓரங்களில் அரை இன்ச் தடவ வேண்டாம்.பீசாவின் மேல் அலங்கரிக்க காய்கறிகளை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- 14
நறுக்கிய காய்கறிகளை ஒன்றன் மேல் ஒன்றாக பரவலாக போட்டுக் கொள்ளவும். விருப்பத்திற்கேற்ப பேபி கார்ன், பன்னீர், சிக்கன் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
- 15
அதன்மீது துருவிய இரண்டு வகை சீஸ் களையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது அடுப்பின் மீது ஒரு இரும்பு தவாவை காய வைக்கவும்.
- 16
தவா சூடானதும் சிம் செய்து விடவும். இதன் மேல் பீசா தட்டை வைக்கவும். இதற்கு மேல் சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோ தூவிக் கொள்ளலாம். இதனை மூடி வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் குறைவான தீயில் வேக விடவும்.
- 17
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய பீசா சுத்தமாகவும் சுகாதாரமாகவும் நாம் வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஈஸி சீசி லேஸ் பீட்சா


மெக்சிகன் பீசா (Mexican pizza recipe in tamil)


கோதுமை வெஜ் பீட்சா🍕


சீசி வெஜ் லசான்யா


ஹோம் மேட் குர்குரே


வெஜ் பன்னீர் பீட்சா - கோதுமை மாவில் (Veg paneer pizza recipe in tamil)


பட்டர் நான்


பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்


மஷ்ரூம் பீட்ஸா (Mushroom pizza recipe in tamil)


மஸ்ரூம் டின்னர் ரோல்(mushroom dinner roll recipe in tamil)


பருப்பு போளி


வெஜ் டோஃபு மோமோஸ்


தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)


வெஜ் பீட்சா


சில்லி சீஸ் டோஸ்ட் (Chilli cheese toast recipe in tamil)


மயோனீஸ் வெஜ் பீட்ஸா (Myonnaise veg pizza recipe in tamil)


வெஜ் பீட்சா


பூந்தி லட்டு


டாமினோஸ் ஸ்டைல் டா கோஸ்(tacos recipe in tamil)


முருமுரு காலிபிளவர் சில்லி


ஆற்காடு மக்கன் பேடா


பாலக் நகெட்ஸ் (palak nuggets recipe in tamil)


பீட்சா ரோல் (Pizza roll recipe in tamil)


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்


உருளைக்கிழங்கு கார ஜிலேபி


*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)


ஸ்பைசி வெஜிடபிள் பீட்ஸா (Spicy vegetable pizza recipe in tamil)


சீசி வைட் சாஸ் பாஸ்தா (Cheesy white sauce pasta recipe in tamil)


டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)


சீஸ் வெஜ் பீட்சா(cheesy veg pizza recipe in tamil)

கமெண்ட்