மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#GA4
மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளி இருமல் போன்றவற்றை தடுப்பதற்காக நமது வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் மற்றும் சீரகம் மிளகு வைத்து சுலபமாக செய்யக்கூடிய மூலிகை சூப். ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது அதிலிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும்.

மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)

#GA4
மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளி இருமல் போன்றவற்றை தடுப்பதற்காக நமது வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் மற்றும் சீரகம் மிளகு வைத்து சுலபமாக செய்யக்கூடிய மூலிகை சூப். ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது அதிலிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 10தூதுவளை இலை
  2. 5கற்பூரவள்ளி இலை
  3. 1வெற்றிலை
  4. 5கறிவேப்பிலை
  5. கொத்தமல்லி இலை- சிறிது
  6. 3பூண்டு
  7. 1 துண்டுஇஞ்சி
  8. 2 டீஸ்பூன்மிளகு
  9. 1 டீஸ்பூன்சீரகம்
  10. 1/4 டீஸ்பூன்மஞ்சள்தூள்
  11. 1/2 டீஸ்பூன்கடுகு
  12. 2 டீஸ்பூன்நல்லெண்ணெய்
  13. உப்பு தேவையான அளவு
  14. 1/2 டீஸ்பூன்வெண்ணெய்
  15. 7சின்ன வெங்காயம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.எடுத்து வைத்துள்ள இலைகளை தண்ணீரில் நன்றாக அலசி பாதியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் சீரகம் மிளகு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.கருவேப்பிலை ஒரு ஐந்து இலைகள் மட்டும் சேர்க்கவும்.சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி நறுக்கிய மூலிகை இலைகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விடவும்.

  2. 2

    வதக்கிய கலவையை நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் நல்ல நன்றாக காய்ந்தவுடன் ஒரு அரை டீஸ்பூன் கடுகு சேர்த்து பொரியவிடவும். 2-3 சின்ன வெங்காயம் சேர்த்து வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நுரை சேரும் வரை மட்டும் அடுப்பில் வைக்கவும்.

  3. 3

    கொதிக்க விடக் கூடாது.. கடாயில் மூடி போடாமல் இந்த சூப் செய்ய வேண்டும். இதை சூப்பாகவும் சிறிது வெண்ணெய் சேர்த்து பரிமாறலாம். கூடவே சூடான சாதத்தில் ரசம் போல் சேர்த்து இரவு நேரங்களில் சாப்பிட சளி தொந்தரவு சரியாகும்.குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மூலிகை சூப் தயார்.நன்றி.ஹேமலதா கதிர்வேல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes