முளைக்கட்டிய கடலை சூப்

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#GA4 Week11 #Sprouts
சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய கடலை சூப்பை சாதத்திற்கு ரசம் ஆகவும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. ஒரு கப் வேகவைத்த முளைக்கட்டிய கருப்பு கடலை
  2. ஒரு பெரிய வெங்காயம்
  3. ஒரு பெரிய தக்காளி
  4. 10 பூண்டு பல்
  5. அரை டீஸ்பூன் சோம்பு
  6. ஒரு துண்டு லவங்கப்பட்டை
  7. 4 கிராம்பு
  8. 1 அன்னாசி பூ
  9. கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி
  10. 1 ஆர்க்கு கருவேப்பிலை
  11. 2ஆர்க்கு கொத்தமல்லி
  12. 1 டேபிள்ஸ்பூன் சமையல் எண்ணெய்
  13. உப்பு தேவையான அளவு
  14. மசாலா பொடி அரைக்க
  15. ஒரு டீஸ்பூன் தனியா
  16. ஒரு டீஸ்பூன் மிளகு
  17. ஒரு டீஸ்பூன் சீரகம்
  18. ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு
  19. இரண்டு வரமிளகாய்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    மசாலா செய்ய கொடுத்திருக்கும் பொருட்களை ஒரு வாணலியில் எண்ணை இல்லாமல் மிதமான தீயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு மிக்ஸியில் இதை பொடி பண்ணிக் கொள்ளவும்.

  2. 2

    முளைக்கட்டிய கடலையை குக்கரில் வேக வைத்து கொள்ளவும். வேகவைத்த நீருடன் சேர்ந்த கடலையை தனியே வைக்கவும்.

  3. 3

    அடி கனமான பாத்திரத்தை சூடேற்றி, சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சோம்பு, லவங்கப்பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ இவற்றை சேர்த்து நன்கு வறுக்கவும். பிறகு கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒன்றிரண்டாக நசுக்கிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    தக்காளி நன்கு கரைந்து வதங்கியவுடன், வேகவைத்த கடலையை அதன் நீருடன் சேர்த்து கலக்கவும். 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

  5. 5

    5 நிமிடத்திற்குப் பிறகு மசாலா பொடியை தூவி, நன்கு கலக்கி ஒரு நிமிடத்திற்கு பிறகு ஸ்டவ்வில் இருந்து இறக்கவும். கொத்துமல்லி தூவி பரிமாறலாம். சுவையான முளைக்கட்டிய கடலை சூப் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes