குஸ்கா (Kushka recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

குஸ்கா (Kushka recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2பிரிஞ்சி இலை
  2. 1துண்டு பட்டை
  3. 3லவங்கம் / கிராம்பு
  4. 1ஸ்பூன் சோம்பு
  5. 2பெரிய வெங்காயம்
  6. 2 தக்காளி
  7. 1பச்சை மிளகாய்
  8. 8பல் பூண்டு
  9. 1துண்டு இஞ்சி
  10. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  12. 2டேபிள் ஸ்பூன் தயிர்
  13. நெய்
  14. எண்ணெய்
  15. கைப்பிடி கொத்த மல்லி மற்றும் புதினா
  16. 2கப் அரிசி
  17. உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கோல்டன் கலர் வரும் வரை வதக்கவும். பின்னர் 1பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  2. 2

    பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கல்லுப்பு சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் அதில் மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின்னர் தயிர் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

  3. 3

    பின்னர் அரிசி சேர்த்து அதனுடன் 2கப் அரிசிக்கு 3கப் தண்ணீர் சேர்த்து கிளறவும். அதன் மேல் புதினா கொத்தமல்லி மற்றும் 2ஸ்பூன் நெய் சேர்த்து பின் உப்பு சரி பார்க்கவும். சற்று உப்பின் சுவை அதிகமாக தெரிய வேண்டும்.

  4. 4

    பின்னர் 3விசில் வரை விட்டு ஆவி பிரிந்த உடன் குக்கரை திறந்து அதன் மேல் 1ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி சூடாக பச்சடியுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manjula Sivakumar
அன்று

Similar Recipes