நெல்லிக்காய் சிக்கன் கறி

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 300 கிராம் சிக்கன்
  2. 5நெல்லிக்காய்
  3. 2 டீஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர்
  4. 1 டீஸ்பூன் தனியா பவுடர்
  5. 1 டீஸ்பூன் சீரகத் தூள்
  6. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  7. 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 1 டீஸ்பூன் சோம்பு தூள்
  9. ஆப் டீஸ்பூன் மஞ்சத்தூள்
  10. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  11. 3 தக்காளி
  12. 2 பெரிய வெங்காயம்
  13. 4 பச்சை மிளகாய்
  14. உப்பு தேவையான அளவு
  15. 1 பாக்கெட் கரம் மசாலா
  16. தண்ணீர் தேவையான அளவு
  17. அரை மூடித் தேங்காய்
  18. வேர்க்கடலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும் எண்ணெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் கிராம்பு போன்ற கரம் மசாலாவை அதில் சேர்க்கவும்.

  2. 2

    நன்கு பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது அதனுடன் பச்சைமிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும்.

  4. 4

    நன்கு வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து அதனுடன் நெல்லிக்காயையும் சேர்க்கவும்.

  5. 5

    நன்கு வதக்கும் பொழுது அதில் மசாலாக்களை இப்பொழுது சேர்க்கலாம் மிளகாய்த் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் சீரகத் தூள் சோம்பு தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    நன்கு வதக்கவும் இப்பொழுது அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்க்கவும். சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மூடி போடவும்

  7. 7

    இப்பொழுது இதற்கு ஊத்த வேண்டிய தேங்காய் விழுதை செய்யலாம் அதற்கு தேங்காய் சிறிதளவு வேர்க்கடலை சோம்பு சேர்த்து விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  8. 8

    சிக்கன் பதினைந்திலிருந்து இருபது நிமிடத்திற்குள் வெந்து விடும் சிக்கன் வெந்த பிறகு அரைத்து வைத்த விழுதை ஊற்றி நன்கு கலக்கவேண்டும் கடைசியாக மிளகு தூள் கலந்து இறக்க வேண்டும்.

  9. 9

    கொத்தமல்லித் தூவி பரிமாறினால் சுவையான நெல்லிக்காய் சிக்கன் கறி தயார் ஒரு முறை செய்து பாருங்கள். சாதம் மட்டும் இல்லாமல் டிபன் அயிட்டம் தீர்க்கும் சூப்பராக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes