கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இன்ஸ்டன்ட் காபி பவுடர் இரண்டு பாக்கெட்
  2. சர்க்கரை ஆப் கப்
  3. வெண்ணிலா ஐஸ்கிரீம் தேவையான அளவு
  4. பால் 300 மில்லி
  5. ஐஸ்கட்டி தேவையான அளவு
  6. டார்க் சாக்லெட் கொக்கோ பவுடர் ஒரு டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கேப்புச்சினோ செய்வதற்கு ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டு பாக்கெட் இன்ஸ்டன்ட் காபி தூளை சேர்க்கவும்.

  2. 2

    அதனுடன் அரை கப் அளவு பொடித்த சர்க்கரையை சேர்க்கவும். இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது ஒரு ஸ்பூன் நோ அல்லது பிளண்டர் யோ எடுத்து கொள்ளவும். அதை வைத்து காபி பவுடரையும் சர்க்கரையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும் ‌

  4. 4

    சிறுக சிறுக தண்ணீர்விட்டு நன்றாக கிரீமியாவில் ஆகும் வரை நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும்.

  5. 5

    இப்பொழுது ஒரு மீடியம் சைஸ் மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளவும். அதில் இரண்டு ஸ்கூப் அளவு வெண்ணிலா ஐஸ்கிரீமை சேர்க்கவும்.

  6. 6

    அதனுடன் நமக்குத் தேவையான அளவு கேப்புச்சினோ கிரீம் சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் டார்க் சாக்லேட் கொக்கோ பவுடர் சேர்க்கவும். நீங்கள் நார்மல் சாக்லேட் போன்றவையும் சேர்க்கலாம்.

  7. 7

    அதனுடன் 300 எம்எல் பால் சேர்த்து. ஐஸ் கட்டி சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் போட்டு 5 நிமிடம் நன்றாக வேகமாக அடித்து எடுத்துக் கொள்ளவும்.

  8. 8

    எப்பொழுது கிரீமி சாக்லேட் கேப்புச்சினோ மில்க் ஷேக் தயார் ஆகிவிட்டது ‌ சில்லென்று பரிமாறுங்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் வெயில் காலத்திற்கும் இதமாக இருக்கும் நன்றி ஒருமுறை செய்து பாருங்கள்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes