வேப்பம்பூ புளிக்குழம்பு (Veppam poo pulikulambu recipe in tamil)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

வேப்பம்பூ ஜீரண சக்திக்கு ,வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தப்படுத்தும். பித்தத்தை தணிய வைக்கும் கல்லீரல் குறைபாடுகளை குணமாக்க உதவும் சிறுநீரக கல் ,பித்தப்பை கல் கரைய உதவும்.#everyday 2

வேப்பம்பூ புளிக்குழம்பு (Veppam poo pulikulambu recipe in tamil)

வேப்பம்பூ ஜீரண சக்திக்கு ,வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தப்படுத்தும். பித்தத்தை தணிய வைக்கும் கல்லீரல் குறைபாடுகளை குணமாக்க உதவும் சிறுநீரக கல் ,பித்தப்பை கல் கரைய உதவும்.#everyday 2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
ஐந்து பேர்
  1. 5 டீஸ்பூன்வேப்பம்பூ
  2. 100 கிராம்சின்ன வெங்காயம்
  3. புளி எலுமிச்சை பழ அளவு
  4. 6 டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்
  5. வெல்லம் சுவைக்கேற்ப
  6. அரை டீஸ்பூன்வெந்தயம்
  7. ஒரு டீஸ்பூன்சீரகம்
  8. கால் டீஸ்பூன்பெருங்காயம்
  9. 15 பல்பூண்டு
  10. 1தக்காளி பெரியது
  11. கால் டீஸ்பூன்நெய்
  12. கறிவேப்பிலை தேவையான அளவு
  13. 1 டீஸ்பூன்அரிசி மாவு
  14. 3 டீஸ்பூன்குழம்பு பொடி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    எடுத்து வைத்துள்ள பொருட்களை சரிபார்க்கவும்.வாணலியில் கால் டீஸ்பூன் நெய் விட்டு சுத்தப்படுத்தி வைத்துள்ள காய்ந்த வேப்பம் பூவை வறுத்து எடுக்கவும்.

  2. 2

    மண் சட்டியில் நல்லெண்ணெய் சேர்த்து வெந்தயம் சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை தாளிக்கவும்.அதனுடன் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    நன்கு வதங்கியதும் அதனுடன் தக்காளி மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி வைக்கவும்.

  4. 4

    பிறகு அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து குழம்பு மிளகாய் தூளையும் சேர்க்கவும் நன்கு கொதி வந்ததும் எடுத்து வைத்துள்ள அரிசி மாவில் சிறிதளவு நீர் கலந்து அதில் சேர்க்கவும்.

  5. 5

    பிறகு வறுத்து வைத்துள்ள வேப்பம்பூ மற்றும் வெல்லம் சேர்த்து பத்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes