எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  1. 100 கிராம்வெள்ளை கொண்டைக்கடலை
  2. 2 பெரியதுஉருளைக்கிழங்கு
  3. ஐந்துவெங்காயம்
  4. 2தக்காளி
  5. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு- பேஸ்ட்
  6. ஒரு டேபிள்ஸ்பூன்தேங்காய்த்துருவல்
  7. ஒரு ஸ்பூன்பெருஞ்சீரகம்
  8. லவங்கம் பிரிஞ்சி இலை - தாளிக்க
  9. ஒரு ஸ்பூன்கரம் மசாலா தூள்
  10. 2 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  11. 5முந்திரிப்பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு பேஸ்ட், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இறக்கும் பொழுது தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

  2. 2

    ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளிக்கவும். பின்னர் அதனுடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் எட்டு மணி நேரம் ஊற வைத்த வெள்ளை கொண்டைக்கடலை, தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து மசாலாவுடன் கலக்கவும்.

  3. 3

    வதக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளியை 5 முந்திரிப் பருப்புடன் சேர்த்து நன்கு மைய அரைத்து குக்கரில் ஊற்றவும்.

  4. 4

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து குக்கரை மூடவும். ஐந்து விசில் வந்தவுடன் 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும்.

  5. 5

    பிரஷர் ரிலீஸ் ஆன பின்பு குக்கரை திறந்து, கரண்டி வைத்து கடலையை நன்கு மசித்துக் கொள்ளவும். சத்தான சென்னா மசாலா கிரேவி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

manu
manu @nidhu
அன்று

Similar Recipes