எம்டி சால்னா

manu
manu @nidhu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  1. 5வெங்காயம்
  2. 4தக்காளி
  3. ஒரு கப்தேங்காய் துருவல்
  4. 2பச்சை மிளகாய்
  5. இரண்டு ஸ்பூன்மிளகாய் தூள்
  6. ஒரு ஸ்பூன்கரம் மசாலாத்தூள்
  7. 5முந்திரிபருப்பு
  8. அரை ஸ்பூன்பெருஞ்சீரகம்
  9. பட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை- தாளிக்க
  10. ஒரு ஸ்பூன்பூண்டு பேஸ்ட்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம்,தக்காளி நன்கு வதங்கிய பின் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 5 நிமிடம் கொதித்த பின்னர் அரைத்து வைத்துள்ளவற்றை அதனுடன் சேர்க்கவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்துகொதிக்க விடவும்.

  4. 4

    நன்கு கொதித்து தேவையான அளவிற்கு வந்தவுடன் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். எம்டி சால்னா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

manu
manu @nidhu
அன்று

Similar Recipes