யம்மி வெல்லச் சீடை

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

அனைவருக்கும் எனது,*கிருஷ்ண ஜெயந்தி* வாழ்த்துக்கள்.கிருஷ்ணருக்கு பிடித்த பட்சணங்களில்,* வெல்லச் சீடையும்*ஒன்று.அதனைமிகவும் சுலபமாகவும்,சுவையாகவும்,
செய்யலாம்.1கப் அரிசி மாவிற்க்கு 26 உருண்டைகள் வந்தது. #kj

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4மணி
6பேர்
  1. 1 கப்பச்சரிசி மாவு
  2. 2டேபிள் ஸ்பூன்முழு உளுந்து
  3. 1டேபிள் ஸ்பூன்வெ.எள்
  4. 2ஸ்பூன்நெய்
  5. 1/2கப்பாகு வெல்லம்
  6. 2டேபிள் ஸ்பூன்பல்லு பல்லாக நறுக்கின தேங்காய்
  7. 1சிட்டிகைஉப்பு ருசிக்கு
  8. 4ஏலக்காய்
  9. தேவையான அளவுதண்ணீர்
  10. பொரிப்பதற்குஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

3/4மணி
  1. 1

    வெறும் கடாயில் பச்சரிசியை போடவும்.

  2. 2

    அரிசியை சிவக்க வறுக்கவும்.உளுந்தை கடாயில் போடவும்.இதையும் சிவக்க வறுக்கவும்.

  3. 3

    எள்ளையும் போட்டு வறுத்துக் கொள்ளவும்.கடாயில் 1ஸ்பூன் நெய் விடவும்.

  4. 4

    நெய் காய்ந்ததும் தேங்காயை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.கடாயில் வெல்லத்தை போடவும்.வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அதில் ஏலக்காய்,உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.

  5. 5

    வெல்லம் கரைந்து பாகுபதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.உளுத்தம் பருப்பு ஆறினதும் மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும்.வறுத்த அரிசி மாவை சல்லடையில் போட்டு சலிக்கவும்.அதனுடன் அரைத்த உளுந்து மாவையும் சேர்த்து சலிக்கவும்.

  6. 6

    சலித்த மாவுடன்,வறுத்த தேங்காய்,நெய்,வறுத்த எள்ளையும் சேர்க்கவும்.அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

  7. 7

    வடிகட்டின வெல்லபாகை மாவில் சிறிது சிறிதாக ஊற்றவும்.பிறகு கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.பிறகு அனைத்தையும் உருட்டி தட்டில் வைக்கவும்.

  8. 8

    கடாயில் எண்ணெயை ஊற்றவும்.நன்கு காய்ந்ததும் அடுப்பை சிறிய தாக்கி விடவும்.பிறகு உருட்டின உருண்டைகளைகொஞ்சமாக போடவும்.

  9. 9

    ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போடவும்.பிறகு எண்ணெய் வடிய எடுத்து ஆயில் பேப்பரில் போடவும்.இது போல் எல்லா உருண்டைகளை யும் நன்கு பொரித்தெடுக்கவும்.

  10. 10

    இப்போது சுவையான,கிருஷ்ணருக்கு பிடித்த,*யம்மி வெல்லச் சீடை* தயார்.நீங்களும் செய்து, கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes