* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#wt3 சகோதரி, திபியா அவர்கள் செய்த,* வெண்டைக்காய் புளிக் குழம்பு* ரெசிபியை இன்று மதியம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.குழம்பு சுவையாகவும் இருந்தது. @Dhibiya's recipe

* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)

#wt3 சகோதரி, திபியா அவர்கள் செய்த,* வெண்டைக்காய் புளிக் குழம்பு* ரெசிபியை இன்று மதியம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.குழம்பு சுவையாகவும் இருந்தது. @Dhibiya's recipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
5 பேர்
  1. 1 கப்வெண்டைக்காய் (சற்று பெரியதாக நறுக்கியது)
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 15 பல்பூண்டு
  5. 1 டேபிள் ஸ்பூன்காஷ்மீரி மி.தூள்
  6. 2 ஸ்பூன்சாம்பார் பொடி
  7. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  8. ருசிக்குகல் உப்பு
  9. நெல்லிக்காய் அளவுபுளி
  10. தேவைக்குதண்ணீர்
  11. 3 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்
  12. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  13. 2சி.மிளகாய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    வெண்டைக்காயை சுத்தம் செய்து, சற்று பெரியதாக நறுக்கவும்.புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.

  2. 2

    வெங்காயம், தக்காளியை நறுக்கி, பின் பூண்டின் தோலை உரித்துக் கொள்ளவும்.கடாயில், 2 டேபிள் ஸ்பூன் ந.எண்ணெய் காய்ந்ததும்,நறுக்கின வெண்டைக்காயை போட்டு நன்கு பொரிக்கவும்.

  3. 3

    பின் அதனை ஒரு தட்டில் எடுக்கவும்.மீதமுள்ள எண்ணெயில்,வெங்காயம், மிளகாய், பூண்டு,உப்பு போட்டு வதக்கவும்.

  4. 4

    பிறகு பொரித்த வெண்டைக்காயை போடவும்.மிக்ஸி ஜாரில் தக்காளியை போட்டு மைய அரைக்கவும்.

  5. 5

    தக்காளி விழுதையும் போட்டு வதக்கி, ம.தூள்,காஷ்மீரி மி.தூள், சாம்பார் பொடி, உப்பு போடவும்.

  6. 6

    ஊறின புளியை நன்கு கரைத்து வடிகட்டி, குழம்பில் ஊற்றி, அடுப்பை சிறியதில் வைத்து நன்கு சுண்ட கொதிக்க விடவும்.மீதமுள்ள ந.எண்ணெயை மேலே விட்டு இறக்கவும்.

  7. 7

    மேலே கறிவேப்பிலை போட்டு பௌலில் மாற்றவும்.இப்போது மதிய உணவிற்கான,* வெண்டைக்காய் புளிக்குழம்பு* சுடசுட தயார்.சுடு சாதத்துடன், நெய்(அ)ந.எண்ணெய், விட்டு குழம்பை பொரித்த, உளுந்து, அரிசி அப்பளத்துடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

கமெண்ட் (8)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
If I may, I would like to make a suggestion regarding photography, Make it simp;e. no confusing background. here is my pulichakuzhzmbuCS

Similar Recipes