* ரோட் சைடு தூர்தால் ரெசிபி *(roadside thoordal recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#SS
இந்த தூர்தால்,ரோட் சைடுகளில் மிகவும் பிரபலமானது.துவரம் பருப்பு எடை இழப்பை ஊக்குவிக்கின்றது.இரத்த அழுத்தத்தை ஒழுங்கு படுத்துகின்றது.இரும்புச் சத்து குறைபாடு, இரத்தச் சோகையை சரி செய்வதற்கு மிகவும் உதவுகின்றது.

* ரோட் சைடு தூர்தால் ரெசிபி *(roadside thoordal recipe in tamil)

#SS
இந்த தூர்தால்,ரோட் சைடுகளில் மிகவும் பிரபலமானது.துவரம் பருப்பு எடை இழப்பை ஊக்குவிக்கின்றது.இரத்த அழுத்தத்தை ஒழுங்கு படுத்துகின்றது.இரும்புச் சத்து குறைபாடு, இரத்தச் சோகையை சரி செய்வதற்கு மிகவும் உதவுகின்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. 2 கப்து.பருப்பு
  2. 2பெ.வெங்காயம்
  3. 1ஸ்பூன்ம.தூள்
  4. 1 ஸ்பூன்தனி மி.தூள்
  5. 1 ஸ்பூன்தனியா தூள்
  6. ருசிக்குக.உப்பு
  7. 1 ஸ்பூன்சீரகம்
  8. 1 டேபிள் ஸ்பூன்நறுக்கின பூண்டு
  9. 2 ஸ்பூன்பசு நெய்
  10. 1 ஸ்பூன்எண்ணெய்
  11. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  12. 4சி.மிளகாய்
  13. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

  2. 2

    நெய்யை உருக்கிக் கொள்ளவும்.

  3. 3

    துவரம் பருப்பை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து, குக்கரில், ம.தூள், உப்பு, வெங்காயம், போடவும்.

  4. 4

    பிறகு தண்ணீர் விட்டு மூடி போட்டு மூடவும்.

  5. 5

    6 விசில் விட்டு குழைய வேக விடவும்.

  6. 6

    அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் காய்ந்ததும், சீரகம் போட்டு பொரிந்ததும், பூண்டை போடவும்.

  7. 7

    பூண்டு வதங்கியதும், மிளகாய் தாளித்ததும், எண்ணெயிலேயே ம.தூள், உப்பு, மி.தூள், தனியா தூள் சேர்க்கவும்.

  8. 8

    அனைத்தையும் பொடி வாசனை போக பொரிய விடவும்.

  9. 9

    பிறகு வெந்த பருப்பை தாளித்ததில், சேர்த்து, 5நிமிடம் கொதித்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  10. 10

    சேர்த்ததும், ஒன்று சேர கலந்து,பெருங்காத்தூள், சேர்த்து,நெய் விடவும்.

  11. 11

    மேலே கொத்தமல்லி தழை போடவும்.

  12. 12

    பிறகு நன்கு கலந்து, பௌலுக்கு மாற்றவும்.இப்போது சுவையான, சுலபமான,* ரோட் சைடு தூர்தால் ரெசிபி*தயார்.இது, தோசை, இட்லி, சப்பாத்திக்கு ஆப்ட்டாக இருக்கும்.சுடு சாதத்தில் இந்த பருப்பை போட்டு, நெய் விட்டு குழந்தைகளுக்கு ஊட்டலாம்.செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes