மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2கப் மில்க் பவுடர்
  2. 1கப் டெசிகெடட் கோகனட்
  3. 3/4கப் சர்க்கரை
  4. 1/4கப் பாதாம், பிஸ்தா
  5. 2சொட்டு கீரின் புட் கலர்
  6. சிறிதளவுநெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சர்க்கரையை பவுடர் செய்து வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் மில்க் பவுடர் சேர்த்து டெசிகெடட் கோகனட் சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    இதில் சர்க்கரை பொடித்தது சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    பால் சிறிதளவு ஊற்றி பிசைந்து வைத்து கொள்ளவும். பிறகு பாதாம் பிஸ்தா சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து எடுத்து கொள்ளவும்.

  4. 4

    இந்த பிசைந்ததில் கால் பாகம் எடுத்து அதில் கீரின் கலர் சேர்த்து பவுடர் செய்த நட்ஸ் சேர்த்து கலந்து பிசைந்து வைத்து கொள்ளவும்.

  5. 5

    பிறகு பட்டர் பேப்பரில் நெய் தடவி வெள்ளை பகுதி கலவையை படத்தில் காட்டியபடி திரட்டி பச்சை பகுதியில் சிறிதளவு சிலிண்டர் வடிவில் உருட்டி அதன் நடுவில் வைத்து உருட்டி கொள்ளவும். படத்தில் காட்டியபடி செய்து கொள்ள வேண்டும்.

  6. 6

    பிறகு சில்வர் பாயிலில் சுற்றி வைத்து கொள்ளவும். பிறகு பிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து கொள்ளவும்.

  7. 7

    பிறகு தேவையான வடிவில்
    கட் செய்து பரிமாறவும். சுவையான மில்க் பிஸ்தா ரோல் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes