*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*(pavakkai koottu recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#FR
பாவக்காய், மூங்தால், கூட்டு எனது முதல் முயற்சி.செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
8 பேர்
  1. 1/4 கிபாவக்காய்
  2. 2மீடியம் சைஸ் தக்காளி
  3. 1/2 கப்பாசி பருப்பு
  4. 1சிறிய மூடிதேங்காய்
  5. 1 ஸ்பூன்சீரகம்
  6. 4ப.மிளகாய்
  7. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  8. 1 1/2 ஸ்பூன்சாம்பார் பொடி
  9. ருசிக்குஉப்பு
  10. 1 டீ ஸ்பூன்சர்க்கரை (பாவக்காயின் பச்சை நிறம் மாறாதிருக்க)
  11. தாளிக்க:-
  12. 1 டீ ஸ்பூன்கடுகு
  13. 1/2 ஸ்பூன்உ.பருப்பு
  14. 2சி.மிளகாய்
  15. 1 டீ ஸ்பூன்சீரகம்
  16. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  17. 2 ஆர்க்குகறிவேப்பிலை
  18. 2 ஸ்பூன்தே. எண்ணெய்
  19. தேவையான அளவுதண்ணீர்
  20. அலங்கரிக்க:-
  21. வட்ட வடிவில் நறுக்கின, பாவக்காய் வில்லைகள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.தேங்காயை துண்டுகளாக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.

  2. 2

    பாவக்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

  3. 3

    மிக்ஸி ஜாரில், தேங்காய், சீரகம், ப. மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.

  4. 4

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரில், பாவக்காய், பாசிப்பருப்பு, தக்காளி, ம.தூள், சாம்பார் பொடி, சர்க்கரை, உப்பு, சேர்க்கவும்.

  5. 5

    பிறகு ப.மிளகாய், தேவையான தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி குழையாமல் வேக விடவும்.

  6. 6

    வெந்ததும், குக்கரை திறந்து, அரைத்த விழுதை சேர்த்து, மூடாமல், 5 நிமிடம் ஒன்று சேர கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.

  7. 7

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், தே.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு,சீரகம், பெருங்காயத்தூள், மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.

  8. 8

    தாளித்ததை கொட்டி, மேலே 1 ஸ்பூன், தே.எண்ணெய் விட்டு, இறக்கவும். பின் நன்கு கிளறி பௌலுக்கு மாற்றவும்.

  9. 9

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*தயார்.செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

  10. 10

    குறிப்பு:- இந்த கூட்டில் தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை கிடைக்கும்.சர்க்கரை சேர்ப்பதால், பாவக்காயின் பச்சை நிறம் மாறாது. கசப்பும் தெரியாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes