வெந்தயக் கஞ்சி

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#காலைஉணவுகள

கோடை காலத்திற்கேற்ற அருமையான காலை உணவு வெந்தயக் கஞ்சி. வெந்தயம் கோடை வெப்பத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்கும். நான் வறட்சியை சரி செய்யும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பேருக்கு
  1. பச்சரிசி - 1 கைப்பிடி
  2. புழுங்கலரிசி - 1 கைப்பிடி
  3. உளுந்து - 1 கைப்பிடி
  4. வெந்தயம் - 2 தேக்கரண்டி
  5. பூண்டு - நாலைந்து பற்கள்
  6. பால் - 2 டம்ளர்
  7. நாட்டுச் சர்க்கரை - 3 மேசைக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் நன்றாகக் கழுவவும். ஒரு குக்கரில் கழுவிய அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து வெள்ளைப்பூண்டையும் சேர்க்கவும்.

  2. 2

    நான்கு கப் தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை வைத்து இறக்கவும்.

  3. 3

    பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து வெந்த கஞ்சியை ஒரு கரண்டியால் மசிக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.

  4. 4

    தேவையான அளவு பாலை அதனுடன் சேர்த்துக் கலக்கவும்.

  5. 5

    நாட்டுச் சர்க்கரையுடன் பரிமாறவும்.

  6. 6

    நாட்டுச் சர்க்கரை விரும்பாதவர்கள் கஞ்சியில் அரைத் தேக்கரண்டியளவு உப்பு சேர்த்து ஊறுகாயுடன் அருந்தலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes