கீரை கஞ்சி

Pooja Samayal & craft
Pooja Samayal & craft @Poojasamayal_16

அதிகமாக காலை உணவாக இதை உட்கொள்வார்கள் வீதி வழிகளில் சிறுசிறு மேசைகளில் வைத்து கஞ்சியினை அநேக இடங்களில் விற்பதுண்டு மிகவும் ஆரோக்கியமான வல்லாரை கஞ்சி. வல்லாரை கிடைக்கா விட்டால் மாத்திரம் வேறு கீரைகளை உபயோகிக்கலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 3 கப் வல்லாரைக்கீரை
  2. 2 கப் சிவப்பு அல்லது வெள்ளை பச்சை அரிசி
  3. 1/2 கப் கருவேப்பிலை
  4. 1 1/2 கப் தேங்காய் பூ
  5. 4 பல்லு பூண்டு
  6. உப்பு தேவையான அளவு
  7. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் இரண்டு கப் சிவப்பு அல்லது வெள்ளை பச்சரிசியை நன்கு கழுவி 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஊறவைத்த அரிசியை குக்கரில் போட்டு இரண்டு கப் அரிசிக்கு ஆறு கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பும் நான்கு வெள்ளை பூடு பல்லும் சேர்த்து நன்கு குழையும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு மிக்ஸி ஜாரில் கருவேப்பிலை வல்லாரை இலை தேங்காய்ப்பூ சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும் அரைத்து அதை ஒரு வடியில் போட்டு நன்கு பிழிந்து சாறை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    இன்னொரு பாத்திரத்தில் வேக வைத்த சாதத்தை போட்டு எடுத்து வைத்திருக்கும் சாரை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    பின்னர் அந்தக் கலவையை அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் வரை நன்கு கிளறி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது மிகவும் சுவையான ஆரோக்கியமான கீரை கஞ்சி தயாராகிவிட்டது இதை அதிகம் காலை உணவுகளில் சேர்த்துக் கொண்டால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் இதனுடன் அச்சாறு ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pooja Samayal & craft
Pooja Samayal & craft @Poojasamayal_16
அன்று

Similar Recipes