மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  2. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  3. இரண்டுபிரியாணி இலை
  4. 3கிராம்பு
  5. 2ஏலக்காய்
  6. சிறிதளவுமுந்திரி
  7. 3பட்டை
  8. ஒன்றுபெரிய வெங்காயம்
  9. 2தக்காளி
  10. 3 டேபிள்ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  11. 4 டேபிள் ஸ்பூன்பிரியாணி மசாலா
  12. ஒரு டீஸ்பூன்கரம் மசாலா
  13. 250 கிராம்மஷ்ரூம்
  14. ஒரு ட ம்ளர்பிரியாணி அரிசி
  15. 2பச்சைமிளகாய்
  16. ஒரு கப்புதினா கொத்தமல்லி
  17. 3 டேபிள் ஸ்பூன்தயிர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் எண்ணெய்,நெய் ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய், பிரியாணி இலை,முந்திரி ஆகியவை நன்கு வதக்கவும்.

  2. 2

    நன்கு வதங்கிய பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம் 2 பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.தக்காளி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    தக்காளி நன்கு வதங்கிய பிறகு கொத்தமல்லி புதினா சேர்த்து நன்கு வதக்கவும். இவை நன்கு வதங்கிய பின்பு தயிர் ஊற்றி வதக்கவும்.

  4. 4

    பிறகு பிரியாணி மசாலா, கரம் மசாலா சேர்த்து வதக்கவும். வெட்டி வைத்திருக்கும் மஷ்ரூமை போட்டு கிளறவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  5. 5

    தண்ணீர் கொதித்த பிறகு கழுவிய அரிசியை போட்டு 2 விசில் வரும் வரை வைத்திருக்கவும். விசில் இறங்கிய பின்பு எடுத்தால் சுவையான மஷ்ரூம் பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes