கல்யாண சாம்பார்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#sambarrasam
கல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது .

கல்யாண சாம்பார்

#sambarrasam
கல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கப் துவரம் பருப்பு
  2. 1 கப் கலவை காய்கறிகள் (கத்திரிக்காய், முருங்கை, வெண்டை,தக்காளி)
  3. எலுமிச்சை அளவுபுளி
  4. தேவையானஅளவு உப்பு
  5. 1/2 டீஸ்பூன் +1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
  7. 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. 1 டீஸ்பூன் கடுகு
  9. 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  10. 1ஆர்க்கு கறிவேப்பிலை மல்லி
  11. வறுத்து பொடி செய்ய:
  12. 2 டீஸ்பூன் கடலை பருப்பு
  13. 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை
  14. 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 25/200 90/200
  15. 6 மிளகாய் வற்றல்
  16. 2டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்

  2. 2

    வறுக்க கொடுத்துள்ள பொருட்களை கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து கொள்ளவும்

  3. 3

    அதனுடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ள வேண்டும்

  4. 4

    துவரம் பருப்பை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்,வெந்தயம் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்

  5. 5

    கடாயில் காய்கறிகள் மற்றும் புளி கரைசல், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  6. 6

    காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்

  7. 7

    பின் அரைத்த பொடியை சேர்த்து லேசாக கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்

  8. 8

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
அன்று

Similar Recipes