வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#GA4/week2 /Fenugreek

*வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இது பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் அநேக சத்துக்கள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன.

வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)

#GA4/week2 /Fenugreek

*வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இது பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் அநேக சத்துக்கள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5-6 பரிமாறுவது
  1. ஒரு டீஸ்பூன் வெந்தயம்
  2. ஒரு டீஸ்பூன் அரிசி
  3. புளி ஒரு எலுமிச்சைப்பழ அளவு
  4. 3டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  5. கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. உப்பு தேவையான அளவு
  7. 4டீஸ்பூன் எண்ணெய்
  8. 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு
  9. கருவேப்பிலை சிறிதளவு
  10. வெல்லம் சிறிய துண்டு
  11. 10சின்ன வெங்காயம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் புளியை தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் நன்கு ஊறவைத்து புளியை கரைத்து வடிகட்டி புளி தண்ணீரை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் வெந்தயம் மற்றும் அரிசியை வறுத்து ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயை சூடேற்றி எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கிய பிறகு குழம்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இதனுடன் புளிக்கரைசல் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

  4. 4

    நன்கு கொதித்ததும் வெந்தய பொடியை தூவி சிறிது நேரம் மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் வெல்லம் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வெந்தய காரக் குழம்பு தயார்.இதை மண் கடாயில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes