பட்டர் பீன்ஸ் குழம்பு(Butter Beans Kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1/4 கிலோ பட்டர் பீன்ஸ்,உளித்து எடுத்து வைக்கவும். பட்டர் பீன்ஸை கழுவி குக்கரில் 2 கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வேகவிடவும்.
- 2
வெந்தவுடன் தண்ணீரை வடித்து, வெந்த பட்டர் பீன்ஸ் எடுத்து வைக்கவும்.1/4 கப் துவரம்பருப்பை குக்கரில் சேர்த்து வேக வைக்கவும்.
- 3
1 எலுமிச்சை அளவு புளியை கழுவி தண்ணீரில் ஊற விடவும். வறுத்து அரைப்பதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் மிளகு, 2 டீ ஸ்பூன் தனியா, 1/4 டீஸ்பூன் வெந்தயம், 5 வர மிளகாய் எடுத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து ஆறவிடவும்.
- 4
ஆறவிட்டதை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து விடவும்.15 சின்ன வெங்காயம், 2 தக்காளி தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1 டீஸ்பூன் கடுகு,1 வரமிளகாய் கிள்ளியது, சிறிதளவு கறிவேப்பிலை தாளித்து விடவும்.
- 5
அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, வெந்த துவரம்பருப்பில் அரைத்த விழுதையும், வதக்கியதும் சேர்த்து விடவும்.
- 6
ஒரு கொதி வந்தவுடன், வெந்த பட்டர் பீன்ஸ், உப்பு சேர்த்து விடவும். புளியை கரைத்து புளி தண்ணீரை ஊற்றி விடவும்.
- 7
குக்கரில் ஒரு விசில் வேகவிடவும். வெந்தவுடன் ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்து கொத்தமல்லி தழை தூவி எடுத்து வைக்கவும். சுவையான பட்டர் பீன்ஸ் குழம்பு ரெடி.😋😋 சூடான சாதத்துடன் சாப்பிட ஜோராக இருக்கும்.
- 8
அப்பளம், வடகம் பொரித்து வைத்து சாப்பிட மேலும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
#coconutகொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். Shyamala Senthil -
அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
#jan1 Shyamala Senthil -
-
மஞ்ச மோர் குழம்பு (Manja mor kulambu recipe in tamil)
#GA4Week1#yogurtமஞ்ச மோர்க்குழம்பு எங்கள் வீட்டில் திடீரென்று விருந்தாளிகள் வந்தால் இந்த மோர் குழம்பை செய்து விருந்தினர்களை அசத்தி விடுவோம்.😍😍 Shyamala Senthil -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil -
பட்டர் பீன்ஸ் கத்தரிக்காய் குழம்பு (Butterbeans kathirikkaai kulambu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
பட்டர் பீன்ஸ் மசாலா (Butter beans masala recipe in tamil)
#goldenapron3#family#nutrient3 பட்டர் பீன்ஸ் இல் அதிக இரும்புச்சத்து உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்துள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பட்டர்பீன்ஸ் மிகவும் பிடிக்கும் அதனால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பட்டர் பீன்ஸ் செய்து அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். Dhivya Malai -
-
-
-
பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)
#GA4#WEEK18#French beans A.Padmavathi -
கத்தரிக்காய். பிடலா.(marriage style brinjal pitla recipe in tamil)
#VKகல்யாணவீட்டில் செய்யும் கத்திரிக்காய் பிட்லா..இது கிராமப்புறங்களில் செய்யும் மிக சுவை யான பழமையான குழம்பு...... பார்ப்பதற்கு சாம்பார் போல் தோன்றினாலும்,மிளகு, மற்றும் வறுத்த தேங்காயின் ருசியுடன் வாசமாகவும் சுவையாகவும் இருக்கும்... Nalini Shankar -
-
-
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
மிளகு குழம்பு (Pepper curry recipe in tamil)
#wt1 குளிருக்கும், சளி, இருமலுக்கும் இந்த மிளகு குழம்பு அபாரமான சுவையா இருக்கும்... இது கூட புடலங்காய் கூட்டு, பீர்க்கன் கூட்டுன்னு எதுனா ஒரு கூட்டு தொட்டுக்க வச்சா......... சப்பு கொட்டி சாப்பிடலாம்..... Tamilmozhiyaal -
லைமா பீன்ஸ் பொறிச்ச குழம்பு (Lima beans poricha kulambu recipe in tamil)
சுவை, புரத சத்து நிறைந்த பொறிச்ச குழம்பு, #ve Lakshmi Sridharan Ph D -
-
-
-
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil)
#எவ்வளவு சமையல் செய்துள்ளேன் இந்த மிளகு குழம்பு இதுவரை வைத்ததில்லை இன்று இதை செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது மழைக்காலத்திற்கு சூப்பரான குழம்பு. Meena Ramesh
More Recipes
கமெண்ட் (4)