மீன் கட்லெட் (Meen cutlet Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் தண்ணீர் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்த மீனை சேர்த்து நன்றாக வேகவைத்து எடுக்கவும்
- 3
வெந்ததும் மீன் முள் நீக்கி பொடியாக உதிர்ந்து விடவும்.
- 4
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாயை சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 6
வதங்கியதும் உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள, தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 7
பின்னர் அதில் வேக வைத்துள்ள மீனை சேர்த்து சிறிது நீர் தெளித்து மசாலா நன்றாக இறங்கும் வரை வதக்கவும்.
- 8
வதங்கியதும் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கிளறி விடவும்
- 9
பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
- 10
இந்த கலவை ஆறியதும் உருண்டையாக உருட்டி சிறு தட்டைகளாக தட்டி வைக்கவும்.
- 11
முட்டையை உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.
- 12
உருட்டிய தட்டைகளை முட்டை கலவையில் முக்கி ரவையில் பிரட்டி வைத்து கொள்ளவும்.
- 13
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டிய தட்டைகளை பொண்ணிறமாக பொரித்து எடுக்கவும்.
- 14
சூடான மீன் கட்லெட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
வாழை இலை மீன் மசாலா (Karimeen pollichathu recipe in tamil)
#nvவாழையிலையின் மனத்தோடு ஆரோக்கியமும் நிறைந்த கேரளாவின் பாரம்பரிய மீன் மசாலா செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
-
பிச்சு போட்ட மீன் வருவல் (Pichu potta meen varuval recipe in tamil)
#arusuvai5 Nithyakalyani Sahayaraj -
-
மீன் பொழிச்சது(meen polichathu recipe in tamil)
இது கேரளாவில் மிகவும் பிரபலமான டிஷ். மிகவும் சுவையாக இருக்கும். ஹோட்டலில் மட்டுமே சாப்பிடுவோம். இன்று நம் வீட்டில் செய்யலாமே என்று தேடிப் பிடித்து இந்த ரெசிபியை செய்தேன். மிகவும் அருமையாக உள்ளது என்று பாராட்டு கிடைத்தது நான் ரோகு மீன் துண்டுகளை வைத்து செய்தேன். punitha ravikumar -
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
மீன் லாலிபாப்/FISHLOLLIPOP (Meen lollipop recipe in tamil)
#GA4 #WEEK5குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மீன், உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து வேக வைக்கவும். 1-2 விசில் போதும்.கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்.மீன் முள் இல்லமால் எடுத்து வைக்கவும், இதனுடன் உருளை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.வதக்கிய கலவையை சேர்த்து கொள்ளவும், இதனுடன் தேவையான, உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள், மல்லி, சிறிது பச்சை வெங்காய சேர்க்கவும்.பின் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும்.உருண்டையை முட்டையில் தொட்டு ரொ ட்டி தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.ஆயில் ஊற்றிக் காய்ந்ததும் போட்டு எடுக்கவும். செம்பியன் -
மீன் பொலிச்சது (Meen polichchathu Recipe in Tamil)
தேங்காயின் அற்புதமான மணம் கொண்ட வழக்கமான கேரள உணவு மற்றும் இது ஒரு வாழை இலையில், தேங்காய் எண்ணெயுடன் சமைக்கப்படுகிறது. உங்களக்கு கரிமீன் கிடைத்தால், தயவுசெய்து அதை பயன்படுத்தவும். அனைவருக்கும் இது எல்லா இடங்களிலும் கிடைக்காது, இது கேரளா மற்றும் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் கிடைக்கிறது. #nutrient2 #book #அம்மா Vaishnavi @ DroolSome -
-
-
More Recipes
கமெண்ட்