கோங்குரா சிக்கன்(ஆந்திரா ஸ்பெஷல்)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#Ap
Week 2

ஆந்திர மாநில உணவுகள் என்றாலே காரசாரமா சாப்பிடுவார்கள் அவர்கள் புளிப்பு சுவைக்கு கோங்குரா வை சட்னி ஆகும் சிக்கன் மற்றும் மட்டனுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவார்கள்.ஆந்திர ஸ்பெஷல் என்றாலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது கோங்குரா மிக அருமையாக இருக்கும் . நம் ஊரில் இதை புளிச்சக்கீரை என்று சொல்லுவோம். கோங்குரா வின் தெரிய வேண்டும் என்பதால் நான் சமைத்த பிறகு லேசாக அதன்மீது வேகவைத்த கோம்பு ரவை சேர்த்து அலங்கரித்து உள்ளேன்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நருக்கு
  1. 200 சிக்கன்
  2. 1கிராம்கைப்பிடியளவும் கோங்குரா (புளிச்சக்கீரை)
  3. 1பெல்லாரி வெங்காயம் பொடியாக நறுக்கியது
  4. 1சிறிய தக்காளி பொடியாக நறுக்கியது
  5. அரை ஸ்பூன் மஞ்சள் பொடி
  6. ஒரு ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  7. 1ஸ்பூன் மிளகுத்தூள்
  8. 1ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்
  9. 4ஸ்பூன் நல்லெண்ணெய்
  10. 5பல் பூண்டு
  11. தேவையான அளவுஉப்பு
  12. கருவேப்பிலைசிறிதளவு மல்லி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் கோங்குரா வை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள் பொடி உப்பு மிளகாய்த்தூள் மிளகுத்தூள் சேர்த்து மேக்னட் செய்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம் தக்காளி மல்லி இலை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து மேக்னட் செய்த சிக்கனை அத்துடன் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்

  3. 3

    எப்பொழுது கோங்குரா அவை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் அல்லது எண்ணெயில் வதக்கி பேஸ்ட் செய்து வைத்துக்கொள்ளலாம். சிக்கனை நன்றாக தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்

  4. 4

    சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் கோங்குரா அத்துடன் சேர்த்து நன்றாக கலந்து மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும். கோங்குரா சிக்கனுடன் நன்றாக பைண்ட் ஆகும் வரை வேகவைத்து இறக்கி பரிமாறவும். நாம் ஓரளவு வெந்த உடன் கொங்கு ரவை சிறிதளவு அலங்கரிப்பதற்காக எடுத்து வைத்து அதன் மேல் தூவி பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes