Veg Kofta Curry with Butter Naan
சமையல் குறிப்புகள்
- 1
துருவிய முட்டைகோஸ், வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை பட்டாணி, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு,சிறிது காரம் மசாலா, கொத்தமல்லி இதனுடன் கார்ன் ஃப்ளார் மாவு 2 ஸ்பூன் சேர்த்து பிசைந்து உருண்டை பிடித்து எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். [ துருவிய முட்டைகோஸில் பிளிந்து தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும்]
- 2
கடாயில் வெண்ணை சேர்த்து ஷாஜீரா,பட்டை, லவங்கம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும். அதனுடன் இரண்டு தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கி {தக்காளியின் தண்ணீர் சுண்டும் வரை வதக்கி} சிவப்பு மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 3
ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை நன்கு வறுத்து அதை இந்த கிரேவியில் கலக்கவும்.கிரேவி திக்னஸ் வரும் வரை கொதிக்க விடவும்.
- 4
பொரித்தெடுத்த கோஃப்தா உருண்டையை ஒரு பாத்திரத்தில் அடுக்கி அதன்மேல் இந்த கிரேவியை ஊற்றி கொத்தமல்லியை தூவினால் சுவையான வெஜ் கோஃப்தா கறி கிரேவி ரெடி.
- 5
தேவையெனில் பிரஷ் கிரீம் சேர்த்துக் கொள்ளலாம்.
- 6
2 கப் மைதா மாவு அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர் 2 கரண்டி தயிர் உப்பு சேர்த்து மாவு பிசைந்து, நாலு மணி நேரம் ஒரு பாத்திரத்தில் மூடி வைக்கவும்.
- 7
இப்போது படத்தில் உள்ளது போல் ஓவல் வடிவத்தில் மாவைத் தேய்த்து அதன்மேல் எள்ளு, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் கொத்தமல்லியை தூவி தண்ணீர் தடவி ஒட்டி விடவும்.
- 8
இப்போது குக்கரை சூடு ஏற்றி தேய்த்த மாவை பின்புறம் தண்ணீர் தடவி குக்கரில் ஒட்டி விடவும்.
- 9
மிதமான சூட்டில் வைத்து வேக விடவும் சிறிது வெந்தவுடன் மேல்பக்கம் உப்பி வரும் அப்போது குக்கரை படத்தில் உள்ளது போல் டைரக்டாக நெருப்பில் ஒரு நிமிடம் வைத்தால் முன்புறமும் வெந்துவிடும்.
- 10
அதை எடுத்து தட்டில் மாற்றி சிறிது வெண்ணை தடவி எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
5🖐🏼Sprouts Kofta curry
#nutrient1 #bookசராசரியாக ஒரு நாளைக்கு 56 கிராம் முதல் 46 கிராம் புரதச்சத்து தேவை. தினமும் தேவைக்கேற்ப புரத உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் பொழுது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் ஹார்மோன்களை கட்டுக்குள் வைக்கிறது.சாதாரணப் பயறுகளைவிட முளைக்கட்டிய தானியத்தில் ஊட்டச்சத்துகள். அதிகம். வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே புரோட்டீன்கள், அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா, இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன.நான் இங்கு அதிக புரதச்சத்து மிக்க 5 தானியங்களை தேர்ந்தெடுத்து அதை முளை கட்டி வைத்து அனைவரும் விரும்பும் வகையில் இந்த கோஃப்தா கறி செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)
#Wd*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,அந்த கருவறையை தாய்மையில்உன்னுள்ளே சுமக்கிறாய்!தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்குமற்ற நாட்களில் அது காகத்திற்கு.அது போலின்றி,மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். kavi murali -
-
வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)
நிறைய வெஜிடேரியன் ஹோட்டலில் மதிய உணவில் மோர் குழம்பு பரிமாறுகிது. அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய இதோ வெள்ளை பூசணி மோர்க்குழம்பு.#hotel Renukabala -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
ஃபுல்ஹா (Phulka with veg gravy)
#india2020 #cookwithfriends #Rajisamayal #maincourse எண்ணெய் குறைவான அளவு சேர்த்து செய்வதால் எளிதில் செரிமானம் ஆகும் ஆரோக்கியமானது Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
தலைப்பு : தாபா பட்டர் நாண் & ஆலு கோபி சப்ஜி(dhaba butter naan recipe in tamil)
#pj G Sathya's Kitchen -
சோயா உருண்டை கறி /Soya Chunks Curry
#Nutrient2#bookசோயா உருண்டை அதிக ஊட்டச்சத்து மிக்கது ஆகும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி3 மற்றும் பி9 போன்ற வைட்டமின்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. soya chunks ,சைவ உணவு உண்பவர்களுக்கு புரதங்களைப் பெற, பொருத்தமான ஒரு ஆதாரம் ஆகும். அது நார்ச்சத்து உட்பொருளையும் அதிக அளவில் கொண்டிருக்கிறது. Shyamala Senthil -
வெஜ் ரைஸ் சீஸ் பால்🍃
# ஸ்னாக்ஸ் #book குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக மீதமாகும் சாதத்தை இதுபோன்று வெஜ் பால் செய்து கொடுங்கள் , மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
ஒகேனக்கல் வஞ்சரம் மீன் வறுவல் (vanjaram meen varuval recipe in tamil)
#bookஒகேனக்கல் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் தனிச்சுவையாக இருக்கும் அதே சுவையில் இப்போது வீட்டிலேயே குறைந்த எண்ணெயில் செய்யலாம் வாங்க Aishwarya Rangan -
-
More Recipes
கமெண்ட்