தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1கட்டு பாலக் கீரை
  2. 1_1/2 கப் துவரம்பருப்பு
  3. 2பெரிய வெங்காயம்
  4. 3தக்காளி
  5. லெமன் அளவு புளி
  6. 4வரமிளகாய்
  7. 4பல் இடித்த பூண்டு
  8. 2ஸ்பூன் சாம்பார் பொடி
  9. 1_1/4 ஸ்பூன் தனியாத்தூள்
  10. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  11. உப்பு தேவையான அளவு
  12. 4டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  13. 2ஸ்பூன் நெய்
  14. 1ஸ்பூன் கடுகு
  15. 1ஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாலக் கீரையை சுத்தம் செய்து அலசி நறுக்கி வைக்கவும்

  2. 2

    குக்கரில் 2 ஸ்பூன் நெய் விட்டு அதில் நறுக்கிய பாலக் இடித்த பூண்டு, துவரம்பருப்பு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடிக்க விடவும் பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் தக்காளி சேர்த்து வதக்கவும் பின் சாம்பார் பொடி தனியாத்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    பின் புளி உடன் தண்ணீர் சேர்த்து சிறிது ஊறவிட்டு கெட்டியாக கரைத்து ஊற்றவும்

  6. 6

    பின் நன்கு கொதித்து திக்கானதும் வேகவைத்த பாலக் பருப்பு கலவையில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்

  7. 7

    சுவையான ஆரோக்கியமான பாலக் கிரேவி ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes