பாலக் தால் தட்கா (Paalak dhaal tadka recipe in tamil)

Sharadha (@my_petite_appetite)
Sharadha (@my_petite_appetite) @cook_23303136

பாலக் தால் தட்கா (Paalak dhaal tadka recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர் தேவையான அளவு
  1. 1 கப் துவரம்பருப்பு
  2. 1 கப் பாசிப்பருப்பு
  3. 2 கப் பாலக் கிரை
  4. 1 டீஸ்பூன் கடுகு
  5. 1 டீஸ்பூன் சோம்பு
  6. 1 சிட்டிகை பெருங்காயம்
  7. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  8. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  11. 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  12. 2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள்
  13. 4 காய்ந்த மிளகாய
  14. 1 டீஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் 1 கப் பாசிப்பருப்பு மற்றும் 1 கப் துவரம்பருப்பு சேர்த்து நன்கு களைந்து முழுதும் வரை தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரசர் குக் செய்யவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் பாலக் கீரையை 30 நொடிகள் போட்டு எடுக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு, பெருங்காயம் மற்றும் கரம் மசாலா சேர்த்து வெடித்ததும் வேகவைத்த பருப்பு கலவை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறவும்.

  4. 4

    வேகவைத்த கீரையை சேர்த்துக் கிளறி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறக்கவும்.

  5. 5

    ஒரு சிறிய கடாயில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், காய்ந்த மிளகாய மற்றும் 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து பருப்பு கலவை மீது சேர்க்கவும்.

  6. 6

    சுவையான தால் தட்கா தயார். ரொட்டி அல்லது சாதம் உடன் உண்டால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharadha (@my_petite_appetite)
அன்று

Similar Recipes