பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)

Sharanya
Sharanya @maghizh13

பாகற்காய் என்றாலே குழந்தைகள் எட்டு அடி தள்ளி நிர்ப்பார்கள்.
அவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்.
#arusuvai6
#goldenapron3

பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)

பாகற்காய் என்றாலே குழந்தைகள் எட்டு அடி தள்ளி நிர்ப்பார்கள்.
அவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்.
#arusuvai6
#goldenapron3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் பொடியாக நறுக்கிய பாகற்காய்
  2. 1நறுக்கிய வெங்காயம்
  3. 1/2நறுக்கிய தக்காளி
  4. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/4ஸ்பூன் மல்லித்தூள்
  7. 1/2கப் வறுத்து பொடித்த பொட்டுக்கடலை/வேர்க்கடலை
  8. 1/2ஸ்பூன் சீரகம்
  9. 1/2ஸ்பூன் சோம்பு
  10. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாகற்காயை பொடியாக நறுக்கி மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி 30நிமிடம் கழித்து அதை வெந்நீரில் கழுவி எடுத்து கொள்ள வேண்டும்

  2. 2

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, சீரகம் தாளித்து பாகற்காயை வதக்கி அதனுடன் வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்

  3. 3

    லேசாக தண்ணீர் தெளித்து வதக்கி அதிலுள்ள பச்சை வாடை போனதும் வறுத்து பொடித்த பொட்டுக்கடலை/வேர்க்கடலை சேர்த்து கிளறி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes