எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/2கிலோ கட்லா மீன்
  2. 4 வெங்காயம்
  3. 3 தக்காளி
  4. 10பல் பூண்டு
  5. சிறிதளவுகறிவேப்பிலை
  6. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/2ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  8. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 2ஸ்பூன் மல்லி தூள்
  10. 3ஸ்பூன் குழம்பு பொடி
  11. தேவையானஅளவு உப்பு
  12. 1/4மூடி தேங்காய்
  13. 1ஸ்பூன் கடுகு
  14. 1/4ஸ்பூன் வெந்தயம்
  15. 1/2ஸ்பூன் சீரகம்
  16. சிறிதளவுகொத்தமல்லி
  17. 3மேசைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மீன் கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு தடவி வைக்கவும்.ஒரு வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம், தக்காளி, பூண்டு நன்கு பேஸ்ட் போல் அரைத்து இதில் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பிறகு இதில் பச்சை வாசனை போனதும் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், குழம்பு பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைத்து கொதிக்க விடவும். பிறகு தேங்காய் அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.

  4. 4

    பின்னர் தேங்காய் பால் சேர்த்து உப்பு, காரம் சரிபார்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் இந்த மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி வைத்து சமைக்கவும்.சுவையான கட்லா மீன் குழம்பு ஹோட்டல் சுவையில் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes