கோதுமைமாவு தாளித்த தோசை (Kothumai maavu thaalitha dosai recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

காலை நேரத்தில் இட்லி மாவு இல்லாத சமயத்தில் கோதுமைமாவில் தாளித்த தோசை சுலபமாக செய்து சாப்பிடலாம். #breakfast

கோதுமைமாவு தாளித்த தோசை (Kothumai maavu thaalitha dosai recipe in tamil)

காலை நேரத்தில் இட்லி மாவு இல்லாத சமயத்தில் கோதுமைமாவில் தாளித்த தோசை சுலபமாக செய்து சாப்பிடலாம். #breakfast

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
5 பேர் சாப்பிடலாம்
  1. 3 டம்ளர் கோதுமைமாவு
  2. 1 டம்ளர் அரிசி மாவு
  3. தேவையான அளவுஉப்பு
  4. 4 பெரிய வெங்காயம்
  5. 5பச்சை மிளகாய்
  6. தேவையான அளவுஎண்ணெய்
  7. தலா ஒரு ஸ்பூன்கடுகு, உளுத்தம் பருப்பு,
  8. தலா ஒரு ஸ்பூன்பெருங்காயம், கறிவேப்பிலை, க. பருப்பு,

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கோதுமைமாவு, அரிசி மாவு, உப்பு, எடுத்து கொள்ளுங்கள், வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாகநறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளித்து உளுந்து பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். கோதுமைமாவில் போட்டு கலந்து கொள்ளவும்

  2. 2

    தண்ணீர் ஊற்றி மாவைப் கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து தோசை கல் சூடானதும் கோதுமைமாவு தோசை ஊற்றி எடுக்கவும்.

  3. 3

    தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes