எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 10பிரட் துண்டுகள்
  2. 2 முட்டை
  3. 1 கப் சர்க்கரை
  4. 2ஏலக்காய்
  5. 2 டீஸ்பூன் நெய்
  6. 1 கப் பால்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    ப்ரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸியில் சர்க்கரை மற்றும் எலக்காய் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.அதனுடன் பொடித்த சர்க்கரை 2tsp நெய் பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

  4. 4

    முட்டை கலவையுடன் பொடித்து வைத்த பிரட் கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  5. 5

    குக்கரில் அடியில் சிறு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் பிரி ஹீட் செய்யவும்.

  6. 6

    கேரமல் சிரப்:
    பாத்திரத்தில் 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து சூடு செய்யவும். சர்க்கரை உருகி சாக்லேட் நிறத்தில் வரும் வரை கலக்கவும். நன்கு சிவந்தவுடன் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி செட் செய்யவும்.

  7. 7

    கேரமல் சிறப்பின் மேல் செய்து வைத்த முட்டை பிரட் கலவையை ஊற்றவும்.

  8. 8

    குக்கரின் உள்ளே வைத்து 40 முதல் 45 நிமிடம் வரை வேக வைக்கவும் விசில் போட தேவையில்லை.

  9. 9

    கத்தி அல்லது குச்சி வைத்து வெந்துவிட்டதா என சோதித்து பார்க்கவும்.

  10. 10

    நன்கு ஆறியவுடன் ஒரு தட்டின் மேல் தலைகீழாக வைத்து கேக்கை திருப்பவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shusma
Shusma @cook_25636036
அன்று

Similar Recipes