மினி மிளகு இட்லி (Mini Pepper Idly recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

மினி மிளகு இட்லி (Mini Pepper Idly recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
  1. 1 கப் இட்லி மாவு
  2. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  3. தாளிக்க :
  4. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  5. 1/4 டீஸ்பூன் கடுகு
  6. 1/4 டீஸ்பூன் உளுந்துப்பருப்பு
  7. 1/4 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  8. 1 வெங்காயம்
  9. கொத்தமல்லி இலை
  10. ஒரு சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    இட்லி மாவு தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து சூடானதும், மினி இட்லி தட்டில் மாவு சேர்த்து ஆவியில் ஏழு நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் மினி இட்லி தயார்.

  3. 3

    பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்துப்பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வதக்கி, பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மிளகுத்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கலக்கவும்.

  4. 4

    பின்னர் தயாராக வைத்துள்ள மினி இட்லியை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் நன்கு கலந்து இறக்கினால் சுவையான மினி மிளகு இட்லி தயார்.

  5. 5

    தயாரான இட்லியை எடுத்து குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்சில் வைத்து, அத்துடன் புரூட்ஸ், ஜூஸ் வைத்து கொடுத்தால் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.

  6. 6

    *நெய் சேர்த்து தாளிப்பு கொடுப்பது குழந்தைகளுக்கு நல்லது. கறிவேப்பிலை சேர்க்காமல் கொடுப்பதால் குழந்தைகள் அப்படியே சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes