எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1/4 கிலோசேனைக்கிழங்கு
  2. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  3. 1/2 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  4. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  5. 1/2 ஸ்பூன்சோம்புத்தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    சேனைக்கிழங்கை தோல் உரித்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சேனைக்கிழங்கு துண்டுகளை போட்டு உப்பு போட்டு முக்கால் பதம் வரும் வரை வேக விடவும். வெந்தவுடன் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வேக வைத்து எடுத்து வைத்த சேனைக்கிழங்கில் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது,சோம்பு தூள் போட்டு பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்.

  4. 4

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பிரட்டி வைத்த சேனைக்கிழங்கை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

  5. 5

    சுவையான சேனைக்கிழங்கு வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes