தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100 கிராம் சோயா சங்ஸ்
  2. 2வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 2 பச்சை மிளகாய்
  5. 2 கொத்து கறிவேப்பிலை
  6. 1/2 முடி துருவிய தேங்காய்
  7. 1பிரிஞ்சி இலை
  8. 1ஏலக்காய்
  9. 1 இஞ்ச் பட்டை
  10. சிறிதளவுகொத்தமல்லி
  11. சிறிதளவுகல்பாசி
  12. 1அன்னாசி பூ
  13. 1 மராத்தி மொக்கு
  14. 4 கிராம்பு
  15. 1/2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது கள்
  16. 1 தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள்
  17. 1 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த்தூள்
  18. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  19. தேவையான அளவுஉப்பு
  20. தேவையான அளவுதாளிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் சோயாவை சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கனமான கடாயை வைத்து 2 குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி, என்னை காய விட வேண்டும்

  3. 3

    பின் எல்லா மசாலாக்களையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், வெங்காயம் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    பின் தக்காளியும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும் பின் வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும்

  5. 5

    குழம்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கஷ்மிரி மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும், பின் வேக வைத்திருக்கும் சோயாவை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்

  6. 6

    பின் அரை மூடி தேங்காயை அரைத்து கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும், பின் தேங்காய் பாலை வதக்கி வைத்திருக்கும் கிரேவியுடன் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்

  7. 7

    ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்துவிட வேண்டும், சோயா கிரேவி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes