தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1 இன்ச் பட்டை
  2. 2 மராத்தி மொக்
  3. 2 ஏலக்காய்
  4. 3 கிராம்பு
  5. 1 சிறிய துண்டு சாதி பத்திரி
  6. 1பிரிஞ்சி இலை
  7. 1 அன்னாசிப் பூ
  8. 3நறுக்கிய வெங்காயம்
  9. 2நறுக்கிய தக்காளி
  10. 6 பச்சை மிளகாய்
  11. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுதுகள்
  12. 1 கப் புதினா
  13. 1 கப் சோயா சங்கஸ்
  14. சிறிதளவுநறுக்கிய கொத்தமல்லி இலை
  15. 2 மேஜை கரண்டி நெய்
  16. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  17. 1/2 தேக்கரண்டி கஷ்மிரி சில்லி பவுடர்
  18. 1/2 மேஜை கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  19. 1/2 மேஜை கரண்டி மல்லித் தூள்
  20. 2 கப் பாசுமதி அரிசி
  21. 2 குழிக்கரண்டி எண்ணெய்
  22. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சமையல் ஆரம்பிக்கும்போதே சோயாவை சிறிதளவு சுடுதண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும், பாஸ்மதி அரிசியை நன்கு சுத்தம் செய்து 20 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும், அடுத்ததாக ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து நன்கு காய்ந்ததும், எல்லா மசாலாக்களையும் சேர்த்து நன்கு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும், தக்காளி மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

  2. 2

    எதுக்காக பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி புதினா சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும், ஊற வைத்திருக்கும் சோயாவை நன்கு பிழிந்து குக்கரில் சேர்க்க வேண்டும்

  3. 3

    மசாலா சோயாவில் இறங்கும் வரை நன்கு கிளறி விட வேண்டும், அடுத்ததாக மஞ்சள்தூள் கஷ்மிரி சில்லி பவுடர் உப்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்

  4. 4

    அடுத்ததாக அரிசியை சேர்த்து உடையாமல் இருக்க மெதுவாக கிளறவேண்டும், தேவையான அளவு உப்பு சேர்த்து உங்க கிளற வேண்டும்

  5. 5

    பின் கப் பாசுமதி அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீ விகிதம் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விசில் விட வேண்டும்

  6. 6

    சுவையான சோயா சங்க்ஸ் பிரியாணி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes