எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
4 பேர்
  1. 2 கப் உலர்ந்த தேங்காய் துருவல்
  2. ஒரு டின் மில்க்மெய்ட்
  3. ஒரு சிட்டிகை பச்சை கலர்
  4. ஒரு சிட்டிகை ஆரஞ்சு கலர்
  5. ஒரு டேபிள் ஸ்பூன் நெய்
  6. ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் கடாயில் உலர்ந்த தேங்காய் துருவல் சேர்த்து லேசாக பிரட்டவும்.

  3. 3

    அதன் பிறகு மில்க் மெய்டு சேர்த்து நன்றாக கிளறவும். இப்பொழுது ஒரு சிட்டிகை ஏலப்பொடி சேர்த்து நெய்யும் சேர்த்து கிளறி வைக்கவும்.

  4. 4

    அதை மூன்று பாகங்களாக பிரித்துக்கொள்ளவும்.

  5. 5

    நெய் தடவிய ஒரு ட்ரேயில் முதலில் பச்சை வண்ண கலவையை போடவும்.அதன் மேல் வெள்ளை வண்ண கலவையை போடவும். கடைசியாக ஆரஞ்சு வண்ணக் கலவையை போட்டு நன்றாக அழுத்தி விடவும்.

  6. 6

    சிறிது நேரம் கழித்து அந்த ட்ரேயை திருப்பிப் துண்டம் போட்டு பேடா போல தட்டி வைத்து அலங்கரித்து வைக்கவும்.சுவையான தேங்காய் பேடா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes