* பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#wt3 @ Renuka Bala' s recipe
சகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை செய்து பார்த்தேன்.சுவை அருமையாக இருந்தது. சுவையும் அருமை.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை.

* பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)

#wt3 @ Renuka Bala' s recipe
சகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை செய்து பார்த்தேன்.சுவை அருமையாக இருந்தது. சுவையும் அருமை.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. 1 கட்டுபாலக் கீரை
  2. 1வெங்காயம் (பெரியது)
  3. 2தக்காளி
  4. 3சி.மிளகாய்
  5. 3ப.மிளகாய்
  6. 1 ஸ்பூன்சீரகம்
  7. ருசிக்குகல் உப்பு
  8. 10 பல்பூண்டு
  9. 2 ஸ்பூன்தே.எண்ணெய்
  10. 1 ஸ்பூன்நெய்
  11. 1டீ ஸ்பூன்சர்க்கரை(கீரையின் நிறம் மாறாமல் இருக்க)

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பாலக் கீரையை சுத்தம் செய்துக் கொள்ளவும்.கடாயில் 2ஸ்பூன் தே.எண்ணெய் விட்டு அடுப்பை சிறிய தாக்கி,காயவிடவும்

  2. 2

    வெங்காயத்தையும், தக்காளியையும் நறுக்கவும்.எண்ணெய் காய்ந்ததும், வெங்காயம், சிறிது உப்பு போட்டு வதக்கவும்.பிறகு, பமிளகாய், சி.மிளகாய், பூண்டு, போட்டு நன்கு வதக்கவும்.

  3. 3

    வதங்கியதும், பாலக் கீரை, சர்க்கரை போட்டு மூடாமல் நன்கு வதக்கி ஆறவிடவும்.ஆறினதும் மிக்ஸி ஜாரில், உப்பு சேர்த்து போடவும்.

  4. 4

    பிறகு நன்கு அரைக்கவும்.அரைத்ததை ஒரு பௌலில் மாற்றி மேலே நெய் விடவும்.

  5. 5

    இப்போது மிகவும், பசுமையான, சுவையான, சுலபமான, ஆரோக்கியமான,* பாலக் கீரை கடையல்* தயார்.செய்து பார்த்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes