ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நான்கு பேர்
  1. 50 கிராம்காலிஃப்ளவர்
  2. 50 கிராம்உருளைக்கிழங்கு
  3. 50 கிராம்கேரட்
  4. 2 டீஸ்பூன்பொட்டுக்கடலை
  5. அரை கப்தேங்காய் துருவல்
  6. அரை டீஸ்பூன்சோம்பு
  7. தாளிக்க பட்டை லவங்கம் அன்னாசிப் பூ பிரிஞ்சி இலை
  8. ஒரு கைப்பிடிமல்லி இலை
  9. 5முந்திரி
  10. தேவைக்கேற்பஉப்பு
  11. 4பச்சை மிளகாய்
  12. ஒன்றுபெரிய வெங்காயம்
  13. 2தக்காளி
  14. ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான காய்கறிகள் அனைத்தையும் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு,லவங்கம் அனைத்தையும் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.அதன் பின் வெங்காயம், தக்காளி சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

  3. 3

    அதன்பின் காய்கறியை சேர்த்து நன்கு வதக்கவேண்டும். பின்னர் மிக்ஸியில் தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, சோம்பு,கிராம்பு, பொரிகடலை,முந்திரி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    அரைத்த விழுதையும் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி 2 முதல் 3 விசில் வரும் வரை வேக விடவும்.

  5. 5

    குக்கரில் விசில் போனதும் திறந்து பார்த்தால் மிகவும் மணமணக்கும் சுவையான வெஜ் குருமா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lathamithra
Lathamithra @lathasenthil
அன்று
Srivilliputhur

Similar Recipes