மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#Welcom
புரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2 கிலோ மட்டன்
  2. 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  3. 100 கி. சின்ன வெங்காயம்
  4. 10 பல் பூண்டு
  5. 20 கிராம் இஞ்சி
  6. 1 துண்டு பட்டை
  7. 1½ ஸ்பூன் சோம்பு
  8. 1½ஸ்பூன் சீரகம்
  9. 1ஸ்பூன் மிளகு
  10. 3 ஏலக்காய்
  11. 1பிரிஞ்சி இலை
  12. கல் பாசி பூ சிறிது
  13. 1 அண்ணாச்சி பூ
  14. 1 மராட்டி மொக்கு
  15. 3 கிராம்பு
  16. 1 ஸ்பூன் கசகசா
  17. 1 ஸ்பூன் வெள்ளை எள்ளு
  18. 2 ஸ்பூன் நிலக்கடலை
  19. 2 ஸ்பூன் மல்லி தூள்
  20. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  21. 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
  22. 1 கப் தேங்காய் துருவல்
  23. சிறிதுகருவேப்பிலை
  24. சிறிதுமல்லி இலை
  25. தேவையான அளவுஉப்பு
  26. 25 மில்லி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சீரகம் மிளகு நன்கு வறுத்து இதனுடன் வெள்ளை எள்ளு, நிலக்கடலை,கசகசா, தேங்காய் துருவல் போன்றவற்றையும் சேர்த்து வறுத்து ஆறவிடவும்

  2. 2

    அதே கடாயில் எண்ணெய் விட்டு வெள்ளைப்பூண்டு இஞ்சி சின்ன வெங்காயம் போன்றவற்றை நன்கு வறுக்கவும்

  3. 3

    இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்

  4. 4

    ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, கல்பாசி பூ,மராட்டி மொக்கு, அண்ணாச்சி பூ போன்றவற்றை பொரிய விடவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    இதனுடன் மஞ்சள்தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்

  6. 6

    இதில் சுத்தம் செய்த மட்டன் சேர்த்து நன்கு வதக்கி பின்னர் காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

  7. 7

    வதங்கியதும் அளவான தண்ணீர் சேர்த்து வேகவிடவும்...

  8. 8

    வதக்கிய வெங்காயத்தை நன்கு அரைத்து வேகவைத்த மட்டனுடன் சேர்க்கவும்

  9. 9

    வறுத்த மசாலா மற்றும் தேங்காயை விழுதாக அரைத்து வைக்கவும்

  10. 10

    வெந்து கொண்டிருக்கும் மட்டனில் தேவையான அளவு உப்பு கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து..

  11. 11

    தேங்காய் விழுதை நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இதனை மூடி

  12. 12

    5 முதல் 7 விசில் வரை வேகவிடவும்..

  13. 13

    பத்து நிமிடம் ஆறிய பின்பு சுவையான மட்டன் குருமா தயார் இது புரோட்டா உடன் மிகுந்த சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes