காய்கறி பாயா (Vegetable paayaa recipe in tamil)

#FC
நானும் தோழி கவிதாவும் சேர்ந்து ஆம்லெட் ஆப்பம் அதற்கு பொருத்தமான காய்கறி பாயா செய்துள்ளோம்.
காய்கறி பாயா (Vegetable paayaa recipe in tamil)
#FC
நானும் தோழி கவிதாவும் சேர்ந்து ஆம்லெட் ஆப்பம் அதற்கு பொருத்தமான காய்கறி பாயா செய்துள்ளோம்.
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறி பாயா செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, கசகசா,முந்திரி பருப்பு சேர்த்து ட்ரை ரோஸ்ட் செய்யவும்.
- 3
அடுப்பை அணைத்து விட்டு புதினா,தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- 4
சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
- 5
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் லவங்கம்,பட்டை,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 6
பின்பு நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 7
பின்னர் நறுக்கிய முருங்கை காய்,உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
- 8
அத்துடன் தனியாத்தூள்,கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து கலந்து மூன்று கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.
- 9
பின்பு திறந்து அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 10
கடைசியாக நறுக்கிய மல்லி இலை,புதினா இலை தூவி இறக்கவும்.
- 11
அதன் மேல் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட்டால் சுவையான வெஜ் பாயா தயார்.
- 12
இந்த காய்கறிகள் சேர்த்து செய்த பாயா மிகவும் சுவையாக இருக்கும். இப்போது சுவையான வெஜ் பாயா சுவைக்கத்தயார்
- 13
இந்த வெஜ் பாயாவை இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம்,சாதம் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சுவைக்கலாம்.
- 14
நானும் தோழி கவிதாவும் சேர்ந்து சமைத்த ஆம்லெட் ஆப்பம் அதற்கு பொருத்தமான காய்கறி பாயா மிகவும் அருமையான சுவையில் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தாழ்ச்சா (Dalcha recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து சமைத்த வெஜிடபிள் பிரியாணி தாழ்ச்சா ரெசிபியை இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
அவியல் (Aviyal recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து ஒரு வித்யாசமான அடை அதற்கு பொருத்தமான அவியல் செய்து பகிர்ந்துள்ளோம். Renukabala -
கடலைக் கறி மசாலா(kadalai curry recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து ஆப்பமும் கடலைக் கறியும் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
வெஜ் பாயா(veg paya recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியா இடியாப்பம் சமைக்க,நான் பாயா செய்து அனுப்புகிறேன்.ருசிக்கட்டும். Ananthi @ Crazy Cookie -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
-
ரெட் கேப்பேஜ் பொரியல்(purple cabbage poriyal recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்துரெட் கேப்பேஜ் பொரியலும் மசாலா சாதம் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)
#FC Nalini_cuisine, @*சாதம்,தோழி நளினி அவர்களும், நானும் சேர்ந்து செய்யும் காம்போ.இந்த பொரியல் காரசாரமானது.சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
*பேபி பொட்டேட்டோ 65* (baby potato 65 recipe in tamil)
#FCதோழி நளினியும், நானும் சேர்ந்து, செய்கின்ற நாலாவது காம்போ.நளினி நூடுல்ஸ் செய்வார்கள். Jegadhambal N -
-
-
கத்தரரிக்காய் முருங்கைகாய் உருளைகிழங்கு புளி குழம்பு
#pmsfamilyகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் 4 பூண்டு இடிச்சி போடனும் சிறிது வெங்காயம் போட்டு வதக்கவும் பிறகு தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.மஞ்சள் குழம்பு மிளகாய் தூள் போட்டு வதக்கவும் பிறகு புளி ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.கடைசியாக சிறிது வெள்ளம் சேர்க்கவும் சுவையை அதிக படுத்த.#pmsfamily😊☺️👍 Anitha Pranow -
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)
காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்தச் சால்னா செய்து சுவையாக சாப்பிடலாம்.#10 Mispa Rani -
பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம். Renukabala
More Recipes
கமெண்ட் (3)