மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)

Fathima
Fathima @FathimaD

#Thechefstory #ATW3
கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 நபர்
  1. 400 கிராம் மொட்டு காளான்
  2. 1/4 கப் நல்லெண்ணெய்
  3. 1/2 கப் சின்ன வெங்காயம் விழுது
  4. 1மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 1மேஜைக் கரண்டி மிளகாய் தூள்
  6. 1 மேஜை கரண்டி மல்லித்தூள்
  7. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  8. 2 தக்காளி
  9. 1 பத்தை தேங்காய்
  10. 1 தேக்கரண்டி சீரகம்
  11. 1/2 தேக்கரண்டி சோம்பு
  12. 1/4 தேக்கரண்டி மிளகு
  13. 1 பச்சை மிளகாய்
  14. தேவையானஅளவு உப்பு
  15. 1/4 கப் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
  16. தாளிப்பதற்கு:
  17. 2மேஜைக் கரண்டி என்னை
  18. 1பிரியாணி இலை
  19. 1 துண்டு பட்டை
  20. 2 கிராம்பு
  21. 2 ஏலக்காய்
  22. சிறிதுகல்பாசி
  23. 1 மராட்டி மொக்கு
  24. 10 கருவேப்பிலை
  25. 1/4 பெரிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மண் சட்டியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரைத்த வெங்காய விழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  2. 2

    காளானை சுத்தம் செய்து கழுவி நறுக்கி சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

  3. 3

    இப்பொழுது காளானில் இருந்து தண்ணீர் விடும். சுண்டும் வரை வதக்கிக் கொள்ளவும். அதன் பின் தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அதன் பிறகு தேங்காய் மிளகு சீரகம் சோம்பு பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து குழம்பில் ஊற்றவும்.

  4. 4

    தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சரிபார்த்து குழம்பு தள தள வென்று கொதிக்கும் நேரத்தில் கொத்தமல்லி இலைகள் தூவி அடுப்பை அணைக்கவும்.

  5. 5

    தாய்ப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை, கல்பாசி பட்டை கிராம்பு, ஏலக்காய் மராட்டி மொக்கு கருவேப்பிலை நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றி கிளறவும்.

  6. 6

    மூடி போட்டு பத்து நிமிடங்கள் விட்டு அதன் பின் பரிமாறவும் புலாவ்,நான்,பரோட்டா, சப்பாத்தி ஆகியவுடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima
Fathima @FathimaD
அன்று

Similar Recipes