செட்டிநாடு பச்சை பயிறு குழம்பு(green gram gravy recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

செட்டிநாடு பச்சை பயிறு குழம்பு(green gram gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
6பேர்
  1. 100 கிராம் வறுத்த அ வறுக்ககாத பச்சை பயறு
  2. 5சின்ன வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 2மிளகாய்
  5. 50ml தேங்காய் பால்
  6. வேக வைக்க:
  7. 10(சின்ன வெங்காயம்
  8. 2தக்காளி
  9. 4மிளகாய்
  10. 1முழு பூண்டு
  11. 1/2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  12. 1ஸ்பூன் மல்லித் தூள்
  13. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. 1/4ஸ்பூன் சோம்பு)
  15. 1ஸ்பூன் ஸ்பூன் நெய்,கடைசியாக சேர்க்க
  16. தேவையானஅளவு உப்பு
  17. தாளிக்க:
  18. 3ஸ்பூன் நல்லெண்ணெய்
  19. கடுகு
  20. வரமிளகாய்
  21. 1/2ஸ்பூன் பெருங்காயத் தூள்
  22. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    பச்சை பயிரை நன்றாகக் கழுவி குக்கரில் சேர்த்து அதனுடன் வெங்காயம், பூண்டு,மிளகாய்,தக்காளி, மிளகாய் தூள்,மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து 5 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.

  2. 2

    ஆவி அடங்கியதும் திறந்து மசித்துக்கொள்ளவும்.

    இங்கு,காரத்திற்கு, பச்சை மிளகாயின் அளவைக் கூட்டிக்கொள்ளலாம். மிளகாய்த் தூளின் அளவை மட்டுமே அதிகப்படுத்தினால்,சுவை மாறும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,பெருங்காயத்தூள்,வரமிளகாய் கருவேப்பிலை தாளித்து 5 நறுக்கிய சின்ன வெங்காயம் வதக்கவும்.

  4. 4

    வதங்கியதும்,தக்காளி மற்றும் மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மசித்த பச்சைப்பயிறை சேர்க்கவும்.கொதித்ததும், குழம்புக்குத் தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

  5. 5

    நன்றாக கொதித்ததும், தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும்,1ஸ்பூன் நெய் மற்றும் நறுக்கிய மல்லி இலை கலந்து இறக்கவும்.

  6. 6

    அவ்வளவுதான். சுவையான செட்டிநாடு பச்சை பயிறு குழம்பு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes