வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#அசைவஉணவு
இன்றைக்கு நாம் பார்க்க போகும் உணவு மிகவும் பிரபலமான வடநாட்டு செய்யமுறையான பட்டர் சிக்கன். நாம் இதனை சப்பாத்தி, நாண், பிரியாணி போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை ஹோட்டல் முறையில் வீட்டிலேயே சிறப்பாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 நபர்
  1. 200கிராம் போன்லெஸ் சிக்கன்,
  2. 3டீஸ்பூன் மிளகாய்த்தூள்,
  3. 2டீஸ்பூன் கரம் மசாலா,
  4. தேவையான அளவு உப்பு,
  5. 3டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,
  6. 2டீஸ்பூன் கெட்டி தயிர்,
  7. 1/2எலுமிச்சைப்பழம்,
  8. 50கிராம் வெண்ணெய்,
  9. முந்திரிப்பருப்பு (10 எண்ணிக்கை),
  10. 1வெங்காயம் நறுக்கியது,
  11. 3தக்காளி நறுக்கியது,
  12. சிறு கொத்தமல்லி இலைகள்,
  13. ஒரு டீஸ்பூன் பிரெஷ் கிரீம்,
  14. 1ஸ்பூன் கஸ்தூரி மேத்தி,

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    200 கிராம் போன்லெஸ் சிக்கன் எடுத்து நன்றாக சுத்தம் செய்து பின்னர் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 2 டீஸ்பூன் கெட்டி தயிர், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/2 எலுமிச்சை ஜூஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

  2. 2

    பின் அரை மணி நேரம் கழித்து ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை பொரித்து எடுக்க வேண்டும்.

  3. 3

    ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அது உருகிய பின் ஒரு பெரிய வெங்காயம், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 10 முந்திரிப்பருப்புகள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

  4. 4

    5 நிமிடம் கழித்து வெட்டி வைத்த 3 தக்காளிகளை சேர்த்து, 1 டீஸ்பூன் கரம் மசாலா, 1/2 டீஸ்பூன் மல்லித்தூள், 1/2 டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து நிமிடம் வதக்கவும். பின் மூன்று டீஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் நன்கு வற்றியதும் மசாலாவை இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.

  5. 5

    அதே கடாயில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து, 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் அரைத்து வைத்த மசாலாவையும் ஊற்றவும். 2 நிமிடம் கழித்து வறுத்து எடுத்த சிக்கன் துண்டுகளை போடவும். இறுதியாக 4 டீஸ்பூன் பிரெஷ் கிரீம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும், பின்னர் 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவவும். சுவையான கிரீமி பட்டர் சிக்கன் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes