எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 5முட்டை
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1வரமிளகாய்
  4. 1/2 தேக்கரண்டியளவுஇஞ்சி பூண்டு விழுது
  5. 1/2தக்காளி
  6. சிறிதுகறிவேப்பிலை கொத்தமல்லி இலை
  7. தேவையான அளவுஉப்பு
  8. 1 தேக்கரண்டியளவுமல்லித்தூள்
  9. 1/2 தேக்கரண்டியளவுசீரகத்தூள்-
  10. 1 1/2 தேக்கரண்டியளவுமிளகுத்தூள்
  11. 4 -5 தேக்கரண்டியளவுஎண்ணெய்
  12. 1/4 தேக்கரண்டியளவுமஞ்சள் தூள்
  13. 1/4 தேக்கரண்டியளவுமிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முட்டைகள் அனைத்தையும் வேக வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டை ஓடு அகற்றிவிட்டு இரு துண்டாக வெட்டி வைக்கவும்.

  2. 2

    பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முட்டைகள் அனைத்தையும் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் மற்றும் 1/2 மிளகாய்த்தூள் சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும். பின்னர் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்...அதே எண்ணிக்கையில் வெங்காயம் மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.. பின்னர் தக்காளி மற்றும் எடுத்து வைத்துள்ள மாசலா தூள்களை சேர்த்து நன்றாக வதக்கவும்..

  3. 3

    பின்னர் வறுத்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.. மிளகு தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி இறக்கவும்.. சுவையான முட்டை மிளகு வறுவல் ரெடி... நன்றி... ஹேமலதா கதிர்வேல்... கோவை பாசக்கார பெண்கள்...

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes