தேவையான பொருட்கள்

3-4 பரிமாறுவது
  1. சுரைக்காய்
  2. ஜவ்வரிசி-1/4 கப்
  3. சக்கரை-1/2 கப்
  4. பால்-1 லிட்டர்
  5. முந்திரி, திராட்சை
  6. ஏலக்காய்த்தூள்
  7. நெய்
  8. குங்குமப்பூ தேவைப்பட்டால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். சுரைக்காயை தோல் நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது நெய் விட்டு துருவிய சுரைக்காயை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின் பால் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.பால் கொதித்ததும் அதில் ஊற வைத்த ஜவ்வரிசி சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.சிறிது திக்கான பதம் வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கி விடவும்.

  2. 2

    சுவையான சுரைக்காய் கீர் தயார். இதனை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes