தேவையான பொருட்கள்

4பேர்
  1. 4- கேரட்
  2. 1/2 லிட்டர் -பால்
  3. கால் கப் சர்க்கரை
  4. 2 துளி- வெனிலா எசன்ஸ்
  5. சிறிது -பச்சை கற்பூரம்
  6. நட்ஸ் (விருப்பப்பட்டால்)

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கேரட்டை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். அதனை ஆற வைத்து மிக்ஸியில் கூழாக அரைக்கவும்.

  2. 2

    அரை லிட்டர் காய்ச்சிய பாலில் அரைத்த கலவையை சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். மேலும் வெண்ணிலா எசன்ஸ் மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து நன்றாக கலந்து சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பருகலாம். விருப்பப்பட்டால் பரிமாறும் பொழுது பொடித்த நட்ஸ் தூவி பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vidhyashree Manoharan
Vidhyashree Manoharan @cook_22267268
அன்று

Similar Recipes