சுஜி வெஜ் கட்லெட்

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

Lock-down recipe
ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ரவை 2 கப் ஒரு ஸ்பூன் நெய் விட்டு வறுத்து வைக்கவும்
  2. வேகவைத்து உதிர்த்த ஸ்வீட் கார்ன் ஒரு கப்
  3. உருளைக்கிழங்கு 2
  4. துருவிய கேரட் ஒரு கப்
  5. பொடியாக அரிந்த பீன்ஸ் அரை கப்
  6. குடை மிளகாய் பொடியாக அரிந்தது அரை கப்
  7. சிவப்பு மிளகாய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன்
  8. சாட் மசாலா தூள் ஒரு ஸ்பூன்
  9. சோள மாவு 3 டீஸ்பூன்
  10. ரஸ்க் பவுடர் ஒரு கப்
  11. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் 3 கப் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் உப்பு ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்கவிடவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து வேகவிடவும். கொஞ்சம் பீன்ஸ் வெந்ததும் ரவையை கொட்டி கிளறவும்.

  2. 2

    ரவை வெந்ததும் அதனுடன் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சோளம் துருவிய கேரட் குடை மிளகாய் பொடியாக அரிந்ததுசிவப்பு மிளகாய் தூள் சாட் மசாலா தூள் சோள மாவு 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுஅனைத்தையும் நன்கு கலந்து பிசையவும். சிறிதளவு நெய்யை கையில் தொட்டு உருண்டையாக உருட்டி தட்டையாக கட்லெட் செய்யவும.

  3. 3

    பொடித்த ரஸ்க் பவுடரில் நன்கு பிரட்டி தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.சுவையான சுஜி வெஜ் கட்லெட் தயார் சாஸுடன் தொட்டு சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes