பறவை கூடு (Bird's Nest)

Pratheepa Madhan
Pratheepa Madhan @cook_22168736
chennai

#Lockdown #nagercoil #book

நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து ஒரு சுவையான ஈவ்னிங் ஸ்னாக்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பேர் சாப்பிடலாம்
  1. 1. உருளைக்கிழங்கு -3
  2. 2. வெங்காயம் -1
  3. 3. இஞ்சி -சிறிதளவு
  4. 4. மஞ்சள் தூள் -1 சிட்டிகை
  5. 5. வத்தல் தூள் - 1 டீஸ்பூன்
  6. 6. கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  7. 7. மிளகு தூள் - 1 சிட்டிகை
  8. 8. சேமியா - ஒரு கப்
  9. 9. மைதா மாவு -அரை கப்
  10. 10. உப்பு - தேவைக்கேற்ப
  11. 11. வேக வைத்த பட்டாணி (அலங்காரத்திற்காக)
  12. 12. கொத்தமல்லி இலை - சிறிதாக நறுக்கியது
  13. 13. பொரிப்பதற்கு தேவயானா ஆயில்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பூரணம் செய்ய உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து,மசித்துக் கொள்ளவும்.பின்பு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் இஞ்சி இவற்றை வதக்க வேண்டும். அத்துடன் மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அத்துடன் பின்பு மசித்த உருளைக் கிழங்கையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

  2. 2

    அரை கப் மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்.பின்பு ஒரு தட்டில் சேமியாவை எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    3. உருட்டிய உருளைக்கிழங்கு உருளைகளை மைதா மாவில் முக்கி பின்பு சேமியாவில் பிரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

  4. 4

    பொரித்தெடுத்த உருளைகளின் மீது வேகவைத்த பட்டாணியை படத்தில் உள்ளது போல் முட்டைகளாக அலங்கரிக்க வேண்டும்.

  5. 5

    சுவையான ஸ்னாக் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (3)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
வித்தியாசமான ரெசிபி வாழ்த்துக்கள்

எழுதியவர்

Pratheepa Madhan
Pratheepa Madhan @cook_22168736
அன்று
chennai

Similar Recipes