நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#lockdown
#goldenapron3

நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 நபர்கள்
  1. நாட்டுக்கோழி முட்டை அல்லது சாதா முட்டை - 6
  2. பெரிய வெங்காயம் - 3
  3. தக்காளி - 2
  4. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  5. மிளகாய்தூள் - 1டேபிள்ஸ்பூன்
  6. சீரகத்தூள் - 1/2டீஸ்பூன்
  7. சோம்புத்தூள் -1/2டீஸ்பூன்
  8. மல்லித்தூள் - 1டேபிள் ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
  10. எண்ணெய் -தேவையான அளவு
  11. உப்பு-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முட்டையை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் சிறிது கல் உப்பு, 1/4 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிவந்ததும் 10 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். உப்பும் எண்ணெயும் சேர்த்து வேக விடுவதால் முட்டை உடையாமல் வரும்

  2. 2

    வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

  3. 3

    முட்டையை வெளியே எடுத்து ஆற விட்டு தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    முட்டைகளை இருபுறமும் சிறிது கீறி வைத்துக் கொள்ளவும்

  5. 5

    மசாலாவிற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்

  7. 7

    தக்காளி நன்கு மசிய வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். நன்கு வதக்கவும்

  8. 8

    பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்க்கவும்

  9. 9

    பிறகு சோம்புத்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்கு வதக்கவும்.

  10. 10

    பிறகு கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து பத்து நிமிடங்கள் வரை கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.

  11. 11

    மசாலா எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி பிறகு முட்டைகளை சேர்க்கவும்

  12. 12

    நாட்டுக்கோழி முட்டை மசாலா மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சாதம், சப்பாத்தி, புல்கா, நாண் இவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ். சாதா முட்டையும் சேர்த்து கூட நீங்கள் செய்யலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes