பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)

#nutrient2
விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது.
பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)
#nutrient2
விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு டம்ளர் அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.காய்கறிகளை நன்கு கழுவி கொஞ்சம் பெரிய சைஸில் அறிந்து கொள்ளவும். பொடியாக அறிந்தால் சாதம் வேகும்போது காய் குழைந்து விடும். 15 சின்ன வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். பின்பு தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கொள்ளவும். கால் டம்ளர் துவரம்பருப்பை மஞ்சள்தூள், 1/4 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து குக்கரில் 4 சவுண்ட் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
4 வர மிளகாய், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் வரக்கொத்தமல்லி, அரை ஸ்பூன் வெந்தயம், அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் எள்ளு, ஒரு ஸ்பூன் கசகசா இவற்றை ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும். பிறகு அதிலே 4 ஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
குக்கரில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, அதில் ஒரு பட்டை, கிராம்பு சேர்த்து கடுகு பெருங்காயம் தாளித்துக் கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயம்,தக்காளி பொடியாக அரிந்தது சேர்த்து 2 நிமிடம் வதக்கி எல்லா காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். மேலும் இதில் கத்திரிக்காய் பட்டாணி போன்ற காய்கறிகளும் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
- 4
இப்போது வெந்த துவரம் பருப்பை சேர்க்கவும். பருப்புத் தண்ணீர் ரசதிற்கு வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளலாம். பிறகு ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். நன்கு கலந்துவிட்டு தேவையான உப்பு சேர்க்கவும். ஒரு டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.பருப்புத் தண்ணீர் சேர்த்துக் கொள்வது என்றால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இவகளை நன்கு கலந்து விட்டு குக்கரை மூடி வைக்கவும். 2 விசில் விட்டு பிறகு சிம்மில் மேலும் 10 நிமிடம் வைக்கவும்.
- 5
இப்போது புளியை கரைத்துக் கொள்ளவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து சாதம் குழைய வெந்து விட்டதா என்று பார்க்கவும். பிறகு அதில் புளித்தண்ணீர் சேர்க்கவும்.
- 6
கரண்டியில் நன்கு கலந்து ஒரு 5 நிமிடம் விடவும். கடைசியாக இரண்டு ஸ்பூன் தூய நல்லெண்ணெய் சேர்க்கவும் பிறகு அறிந்த கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும். சாம்பார் சாதத்துடன் வடகம் அல்லது அப்பளம் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#ap week 2சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது. Jassi Aarif -
மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)
#ed3 #இஞ்சி, பூண்டுமினி இட்லி சாம்பார் போல மினி இட்லி கோபி கிரேவி. காலிஃப்ளவர் வைத்து கிராவி செய்து மினி இட்லி ஊற்றி எடுத்து அதில் கிராவியை ஊற்றி அதன் மேல் டெக்கரேட் செய்தால் மினி இட்லி கோபி கிரேவி தயார். Meena Ramesh -
கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
கேரட்டில் விட்டமின் ஏ ,பீட்டா கரோட்டின் வைட்டமின் சி ,போன்றவை நிறைந்துள்ளது இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் மூளை சுறுசுறுப்பாகும் செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும், கேரட் கரோட்டினாய்டு சத்துக்கள் நிறைந்த உணவு ,அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ளலாம். #I love cooking Sree Devi Govindarajan -
மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது. Jassi Aarif -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
#deepfryவெண்டைக்காயில் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ சி டி பி6 கால்சியம் அயன் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இந்த கிரிஸ்பி வெண்டைக்காயை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் jassi Aarif -
முட்டை வறுவல்(muttai varuval recipe in tamil)
#Nutritionமுட்டையில் புரதச்சத்து மற்றும் விட்டமின் டி நிறைந்துள்ளது சின்ன வெங்காயத்தில் கால்சியம், பாஸ்பரஸ், ஐயன் ,மினரல் ,விட்டமின், பொட்டாசியம், அதிகம் நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
பச்சரிசி எலுமிச்சை சாதம் 🍋 (Pacharisi elumichai satham recipe in tamil)
#poojaசுவாமி நைவேத்தியத்திற்கு எப்படி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்ப்பது இல்லையோ அதேபோல் புழுங்கல் அரிசி சாதமும் சேர்க்க மாட்டோம். விரத நாட்களில் பச்சரிசி சாதம் மட்டுமே செய்வோம். மற்றும் வெறும் நாட்களில் புழுங்கல் அரிசியில் இதுபோன்ற கலவை சாதம் செய்வோம்.புழுங்கல் அரிசியை விட பச்சரிசியில் புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், செய்யும் போது சுவை அதிகமாக இருக்கும். தயிர் சாதத்திற்கு பச்சரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து கொஞ்சமாக தயிர் சேர்த்து இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து சாதம் கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
* பச்சை பயறு அடை * (பெசரெட்)(green gram adai recipe in tamil)
#birthday3ப.பயறு நமது உடலுக்கு வலு மற்றும் ஊக்கம் தருகின்றது.இதில் வைட்டமின்கள் ஏ,பி,சி,ஈ உள்ளது.மேலும், நார்ச் சத்து, இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. Jegadhambal N -
*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian curriesபனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
குடைமிளகாய் சாதம் type 2(capsicum rice recipe in tamil)
#welcomeஆரோக்கியத்தை முன் வைப்போம்... அசத்தலாக சமைப்போம்..2022 வருடத்திற்கான ஆரோக்கிய அழைப்பு உணவு.. Meena Ramesh -
மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)
#arusuvai5வழக்கமாக நாம் சாம்பார் செய்யும்போது துவரம்பருப்பை பயன்படுத்துவோம். ஒரு மாறுதலுக்காக நான் மசூர் பருப்பை பயன்படுத்தி முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளேன். சுவை வித்தியாசமாக உள்ளது. Meena Ramesh -
கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
தைப்பொங்கல் என்று பால் பொங்கலுக்கு நாங்கள் செய்யும் சாம்பார் இது. துவரம் பருப்பில் இந்த சாம்பாரில் செய்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது எல்லா காய்களும் சேர்ப்பதால். Meena Ramesh -
உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)
Arusuvai3இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் சுவையாக இருக்கும்.வெங்காய சாம்பார் மோர் குழம்பு முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் ரசம் மோர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிடலாம். Meena Ramesh -
Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
#Pongalஇந்த தயிர் பச்சடி சாம்பார் சாதம், சப்பாத்தி, பிரியாணி, தக்காளி சாதம், பரோட்டா மற்றும் வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த தயிர் பச்சடி இது. புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
பரங்கிக்காய் சூப்/Pumpkin Soup🎃
#immunity #bookபரங்கிக்காயில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. கண் பார்வைக்கு மிகவும் நல்லது.பரங்கிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், உங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking kavi murali -
தக்காளி சாதம் /Tomato Rice
#Nutrient2தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் உள்ளது .அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.ஆகவே நான் இன்று தக்காளி சாதம் செய்தேன் .😋😋 Shyamala Senthil -
தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
#arusuvai3புளி சேர்க்காத வாழைதண்டு குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும். கொஞ்சம் காரம் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்,இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். நீர்க்க வைக்க கூடாது. கொஞ்சம் கெட்டியாக வைக்க வேண்டும். Meena Ramesh -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
பீட்ரூட் இட்லி (Beetroot idli Recipe in Tamil)
#nutrient3#bookபீட்ரூட்டில் பைபர் அயன் விட்டமின் b9 மெக்னீசியம் பொட்டாசியம் விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது Jassi Aarif -
-
ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
#apஆந்திரா 2 செல்லும் போது ஹோட்டலில் இதே சுவை கொண்ட சாம்பார் டிபனுக்கு சாப்பிட்டு உள்ளேன். என் ஆந்திர மாநில (விசாகப்பட்டினம்) தோழியிடம் கேட்டு இந்த சாம்பார் செய்தேன். Meena Ramesh -
வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil)
#nutrient1 #bookகடலைப்பருப்பில் புரதம் அதிகம் உள்ளது. சைவ புரதத்தின் ஒரு சிறந்த உதாரணம் இது. புரதசத்து மட்டுமில்லாமல் இதர தாதுக்களும் அதிகம் உள்ளது. நார்ச்சத்து அதிகம். விட்டமின் பி காம்ப்ளக்ஸ் இதில் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க அதிக இன்சுலினை சுரக்க வைக்கிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் எடை குறைய உதவுகிறது. கண் பார்வைக்கு நல்லது.உணவில் உள்ள சக்தியை நமக்கு பிரித்து எடுத்துக் கொடுக்கிறது. புதிய செல்கள் உருவாக உதவுகிறது. எலும்புகள் மற்றும் பற்கள் உறுதிக்கு உதவுகிறது. ஹீமோகுளோபின் பற்றாக்குறையை தீர்க்கிறது. உயிரணுக்கள் பெருக்கத்திற்கு உதவுகிறது. இதயம் ஆரோக்கியம் பெறுகிறது. மிகக்குறைந்த கொழுப்பு சக்தி இருப்பதால் உயர் ரத்த அழுத்த நோய் குறைய வழி வகுக்கிறது. பாஸ்பரஸ் அதிகம் இருக்கிறது. ஆகவே கடலைப்பருப்பை நம் அன்றாட உணவு பழக்கத்தில் ஏதாவது ஒரு வகையில் செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. Meena Ramesh -
வாழை தண்டு பொரியல் (plantain stem fry recipe in tamil)
வாழை தண்டு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதில் விட்டமின் பீ,பொட்டாசியம்,டையூரிக் போன்ற சத்துக்கள் உள்ளது. வாழை தண்டு ஜுஸ் சிறுநீர் கற்களை கரைக்கவும், உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் கொண்டது. Renukabala -
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
ரோசாப்பூ சட்னி/onion (Rosapoo chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookஇந்த ரோசாப்பூ சட்னி செட்டிநாடு வகை சட்னி ஆகும். என்னுடைய அம்மா எனக்கு பிடிக்கும் என்றுசெய்து தருவார்கள். எனக்கு இதன் செய்முறை தெரியாது. 32 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள என் கல்லூரி தோழி மூலம் இதன் செய்முறையை தெரிந்து கொண்டேன்.தக்காளியில் விட்டமின் ஏ 16% விட்டமின் சி 22% விட்டமின் பி 5% உள்ளது மற்றும் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளது உள்ளது. தக்காளியில் ஜூஸ் மற்றும் சாஸ் பொருட்களை தயாரிக்கலாம். மற்றும் தக்காளி பொருட்கள் இதய நோய் மற்றும் பல புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது இந்த பழம் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது வெயிலில் இருந்து பாதுகாக்கும்.தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து செய்த சட்னி ஆகும் இது இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
கொண்டைகடலை சாதம்(Kondaikadalai Satham Recipe in Tamil)
#nutrient1புரத சத்து நிறைந்த முளைகட்டிய கொண்டைகடலை வைத்து செய்த சாதம். எளிதில் செய்து விடலாம் Sowmya sundar -
காலிஃப்ளவர் ஃப்ரை (Califlower fry recipe in tamil)
#deepfryஇயற்கையாகவே காலிபிளவரில் விட்டமின் பி ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. கேன்சர் நோய் வருவதை தடுக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது Jassi Aarif
More Recipes
கமெண்ட் (3)